வாண்டு பாண்டு: சின்ன அரிசி, பெரிய பொரி!

By மிது கார்த்தி

பாண்டு: ஹேய் வாண்டு, இன்னைக்கு ஏன் நீ விளையாட வரலை?

வாண்டு: இன்னிக்கு என்ன நாளு?

பாண்டு: ஆயுத பூஜை.

வாண்டு: ம்... தெரியுதுல்ல... வீட்டுல இன்னிக்கு எல்லா பொருளையும் துடைச்சு சுத்தம் செய்யச் சொன்னாங்க அம்மா. டிமிக்கி கொடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா, அம்மா திட்டுவாங்க. அதான் வர முடியலை.

பாண்டு: சரி… சரி… உங்க வீட்டுல பொரி, கடலையெல்லாம் வாங்கியாச்சா?

வாண்டு: ம்... அப்பா, இப்பத்தான் வாங்கிட்டு வந்தாரு. எனக்குதான் பொரின்னா ரொம்பப் பிடிக்குமே. ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நீ பொரியைப் பத்தி சொன்னவுடனேதான், எனக்கு ஞாபகம் வருது பாண்டு.

பாண்டு: என்ன விஷயம் அப்படி ஞாபகத்துக்கு வந்துச்சு?

வாண்டு: எங்க டியூஷன் அக்கா, அவங்களோட வீட்டுக்குப் பக்கத்துல பொரி தயாரிக்கிற ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

பாண்டு: சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல. பொரியை அரிசியிலதான் செய்யுறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அரிசியைவிட பொரி ரொம்ப பெரிசா இருக்கேன்னு எனக்கு ஒரு சந்தேகம் எப்பவும் இருந்தது. அரிசி எப்படிப் பெரிய பொரியா மாறுது வாண்டு?

வாண்டு: சாரி பாண்டு, உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா மறந்துட்டேன். பொரி எப்படி செய்யுறாங்கன்னு சொல்றேன். செடியில் நல்லா முத்தின நெல்லை இரவு முழுசும் தண்ணில ஊற வைக்கிறாங்க. காலையில அந்தத் தண்ணீரை வடிச்சிட்டு, அதை எட்டுல இருந்து பத்து மணி நேரத்துக்கு உலர வைக்கிறாங்க. அதுக்கப்புறம் அந்த நெல்லை இரும்புச் சட்டி, இல்லைன்னா மண் சட்டியில மணலைப் போட்டு 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்துல வறுக்குறாங்க. அப்படி வறுக்கறுப்ப நெல் கொஞ்சம் கொஞ்சமா உப்ப ஆரம்பிக்குது. உப்பிய நெல்லுல இருந்து உமியைப் பிரிச்சுட்டா பொரி கிடைக்கும். அரிசியைவிட பொரி, கிட்டத்தட்ட 8 மடங்கு பெரிசாயிடுது.

பாண்டு: அப்பாடி, பொரி செய்யுறதல இவ்வளவு விஷயம் இருக்கா? நாம 10 ரூபாவுக்கு பொரியை வாங்கி ஈஸியா சாப்பிட்டுட்டு போயிடுறோம்.

வாண்டு: ஆமா, நீ சொல்றது உண்மைதான். இது பொரி தயாரிக்கிற பழைய முறையாம். இப்போல்லாம் எலெக்ட்ரிக் மெஷின்ல போட்டு பொரியை ஈஸியா பொரிச்சிடுறாங்க.

பாண்டு: ஓ… இப்படியும்கூட பொரி செய்யுறாங்களா? என்ன வாண்டு திடீர்ன்னு யோசிக்க ஆரம்பிசுட்ட.

வாண்டு: எங்கப்பாவோட ஃபிரெண்டு ஆஸ்பத்திரில இருக்காரு. அவரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்னு அப்பா சொன்னாரு. அந்த ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல ரயில்வே பாலத்தைக் கடக்குறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். வரலைன்னு சொன்னாலும், அப்பா திட்டுவாரு.

பாண்டு: ஓ… அப்படியா? அப்ப நீயும் நம்ம பிரதமருக்கு ஒரு கடிதம் போட்டுடு.

வாண்டு: கடிதமா? நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.

பாண்டு: நான் கரெக்டாதான் சொல்லிட்டு இருக்கேன். போன வாரம் நம்மள மாதிரி ஒரு குட்டிப் பையன் பிரதமருக்குக் கடிதம் போட்டான். அதைத்தான் நான் சொல்றேன்.

வாண்டு: அப்படியா...? அவன் எதுக்கு பிரதமருக்குக் கடிதம் போட்டானாம்?

பாண்டு: சொல்றேன் வாண்டு, பெங்களூர்ல அபினவ்னு ஒரு குட்டிப் பையன் 3-ம் வகுப்பு படிக்கிறான். அவன் பள்ளிக்கு போற வழியில ரயில்வே மேம்பாலம் கட்டுறாங்களாம். அதனால ரொம்ப டிராஃபிக் ஜாம் ஆயிடுமாம். டிராஃபிக்னால தினமும் அபினவ் பள்ளிக்கூடத்துக்குப் போக ரொம்ப லேட் ஆகுதாம். இந்த விஷயத்தைப் பத்திதான் பிரதமருக்கு அபினவ் கடிதம் எழுதி போட்டுருக்கான்.

வாண்டு: ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கானே… அதுக்கு பிரதமர் கிட்ட இருந்து பதில் வந்துச்சா?

பாண்டு: ஆமா வாண்டு, பதில் வந்துச்சாம். பிரதமரோட அலுவலகத்துல இருந்து பதில் போட்டாங்களாம். அந்தப் பதில்ல, இந்த விஷயத்தை ரயில்வே அதிகாரிகள்கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்குறோம். இப்படி சமூக அக்கறைய வெளிப்படுத்தியதுக்காக பாராட்டுறோம்னு பிரதமர் பெயருல பதில் வந்துச்சாம்.

வாண்டு: ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு. நீ சொன்ன மாதிரி நானும்கூட கடிதம் போடுறேன்.

பாண்டு: ம்...நல்லா எழுது. சரி வாண்டு, நான்கூட என் சைக்கிளை துடைக்கணும். அப்போ வரட்டுமா?

வாண்டு: சரி பாண்டு, டாட்டா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

56 mins ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்