வாண்டு பாண்டு: சின்னப் பையனுக்கு முதல்வர் தந்த பரிசு!

By மிது கார்த்தி

வாண்டு: ஹேய் பாண்டு, ஊர்ல இருந்து எப்போ வந்தே?

பாண்டு: இன்னைக்குக் காலைலதான் வந்தேன் வாண்டு.

வாண்டு: ஓ... வண்டலூர் விலங்குக் காட்சியகத்துக்குப் போறதா சொன்னியே... போனீயா?

பாண்டு: ம்.. போனேன். ரொம்ப பெருசா இருந்துச்சு. நீ சொன்ன காட்டு எருதையும், அதோட கன்றுக்குட்டியையும்கூட பார்த்தேனே.

வாண்டு: ஓ... அங்க வேற என்ன புதுசா பார்த்த?

பாண்டு: லக்னோல இருந்து நீல நிற மக்காவ் கிளி ஜோடியைக் கொண்டு வந்திருக்காங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் அதுங்க வந்துருக்கு. ரொம்ப அரிய வகைக் கிளியாம் இது. அதோட அலகும் அழகும் இருக்கே... நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கலாம் வாண்டு.

வாண்டு: நீ சொல்றதைக் கேட்குறப்ப, எனக்கும் அந்தக் கிளிய பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஏய் பாண்டு, கையில என்ன போஸ்ட் கவர் மாதிரி இருக்கே?

பாண்டு: போஸ்ட் கவரேதான். ‘மாயா பஜார்’ல நம்மள மாதிரி குட்டிப் பசங்க துணுக்குகள், படைப்புகள், புதிர்கள் எல்லாம் அனுப்ப சொல்லியிருக்காங்கள்ல. நான் ஒரு துணுக்கு எழுதியிருக்கேன். அதை அனுப்பதான் இந்த கவரை வாங்கிட்டு போறேன்.

வாண்டு:

ஓ... துணுக்கெல்லாம்கூட எழுத ஆரம்பிச்சுட்டியா. ரொம்ப நல்ல விஷயம்தான். நீ போஸ்ட் கவரைப் பத்தி சொன்னவுடன்தான், எனக்கு ஒரு ஞாபகம் வருது. அக்டோபர் 9-ம் தேதி உலக அஞ்சல் தினமாம்.

பாண்டு: உலக அஞ்சல் தினமா...? அதைப் பத்தி சொல்லேன்.

வாண்டு: சொல்றேன் பாண்டு, ஸ்காட்லாந்துல 1712-ம் ஆண்டுதான் முதன்முதலா அஞ்சல் நிலையத்தைத் தொடங்கினாங்களாம். இப்போ உலகம் பூரா எட்டு லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல் நிலையங்கள் இருக்காம். அதுலயும் இந்தியாவுலதான் ரொம்ப அதிகம் இருக்காம். நம்ம நாட்டுல மட்டும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இருக்காம்.

பாண்டு: ஹேய் வாண்டு, இவ்வளவு தகவலை எப்படிச் சேகரிச்சே? ரொம்ப பிரமிப்பா இருக்கு. அது சரி, அது ஏன் அக்டோபர் 9-ம் தேதி உலக அஞ்சல் தினமா கொண்டாடுறாங்க. அதுக்கான காரணத்தை நீ சொல்லவே இல்லையே?

வாண்டு: அதுக்குக் காரணம் இருக்கு பாண்டு. நான் சொல்றதுக்கு முன்னாடி, நீயே அதைக் கேட்டுட்ட. சுவிட்சர்லாந்து தலைநகர் ‘பெர்ன்’னில் 1874-ம் வருஷம் அக்டோபர் 9-ம் தேதியன்னைக்கு ‘சர்வதேச அஞ்சல் ஒன்றிய’த்தைத் தொடங்குனாங்களாம். அதோட ஞாபகமாத்தான் அந்தத் தேதியில உலக அஞ்சல் தினம் கொண்டாடடுறாங்க.

பாண்டு:

ஓ... உன்னோட புண்ணியத்துல உலக அஞ்சல் தினத்தைப் பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் என்கிட்டகூட ஒரு தகவல் இருக்குப்பா.

வாண்டு: அப்படியா...? அது என்ன தகவல்?.

பாண்டு: சொல்றேன் வாண்டு. அந்தத் தகவலை நான் பேப்பர்லதான் பார்த்தேன். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவுல, நம்மள மாதிரி ஒரு குட்டிப் பையனை வரச்சொல்லி அந்த மாநிலத்தோட முதல்வர் அகிலேஷ் யாதவ் 5 லட்சம் ரூபா பரிசு கொடுத்தாராம்.

வாண்டு: ஏதாவது போட்டியில ஜெயிச்சதால பரிசு கொடுத்தாங்களோ?

பாண்டு: அதான் இல்லை. நமக்கு என்ன தேவையோ, அதையெல்லாம் நம்ம அம்மா, அப்பா வாங்கி கொடுத்திடுறாங்க. ஆனா, நொய்டாவுல 9-ம் வகுப்பு படிக்குற ஹரீந்தர் சிங் ரொம்ப ஏழையாம். அம்மா, அப்பா இருந்தும்கூட, அவனுக்கு வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலையாம். அதனால எடை பாக்குற மெஷினை வாங்கி, அதை ரோட்டோரமா வைச்சு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சானாம். அது மட்டுமல்ல, ஹரீந்தர் சிங் படிப்பையும் விடலை.

வாண்டு: சின்ன வயசில சம்பாதிச்சுக்கிட்டே படிக்குறது எவ்ளோ கஷ்டம்... பாவமில்ல ஹரீந்தர் சிங்.

பாண்டு: உண்மைதான். இன்னும் விஷயத்தை நான் முழுசா சொல்லி முடிக்கல வாண்டு. மிச்சத்தையும் கேளு.

வாண்டு: ம்... சொல்லு சொல்லு...

பாண்டு: தினமும் ஹரீந்தர் சிங் ரோட்டோரமா எடை பாக்குற மெஷின் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு வீட்டுப் பாடங்கள செய்வானாம். அப்படி வீட்டுப் பாடங்கள செய்யுறத போட்டோ எடுத்து இண்டர்நெட்டுல யாரோ போட்டுடாங்க. அதை நிறைய பேர் பார்த்த மாதிரி, அந்த மாநில முதல்வரும் பார்த்திருக்காரு. அதனாலதான் ஹரீந்தர் சிங்கைக் கூப்பிட்டுப் படிப்பு செலவுக்காகப் பரிசு கொடுத்தாராம்.

வாண்டு: ரொம்ப நல்ல விஷயம்தான். நம்ம நாட்டுல இது மாதிரி கஷ்டப்படுற ஹரீந்தர் சிங்குகள், இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்களோ...

பாண்டு: சரியா சொன்னே. சரி சரி, இந்தத் துணுக்கை அனுப்ப நான் போஸ்ட் ஆபீஸ் போகணும். நான் போய்ட்டு வரட்டா.

வாண்டு: சரி பாண்டு, நானும் அப்பாகூட கடைக்குப் போகணும். டாட்டா பை...பை...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்