இந்த வாரம் உங்கள் நண்பர் களிடம் மேஜிக் ஸ்டிரா (உறிஞ்சு குழாய்) வைத்திருப்பதாகச் சொல்லுங்கள். அதை யாராவது பார்க்க வேண்டுமா என்று கேட்டு, உங்கள் மேஜிக் வித்தையை ஆரம்பியுங்கள்.
என்னென்ன தேவை?
ஒரு பாட்டில், உறிஞ்சு குழல்
மேஜிக்:
ஒரு பாட்டிலை மேஜை மீது எடுத்து வையுங்கள். அந்த பாட்டில் மீது ஒரு உறிஞ்சு குழாயைப் படத்தில் காட்டியுள்ளதைப் போல வைக்க வேண்டும்.
இப்போது மேஜிக் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே, உறிஞ்சு குழாய் அருகே உங்கள் கையைக் கொண்டு செல்லுங்கள்.
உறிஞ்சு குழாயைத் தொடாம லேயே, நீங்கள் கை காட்டும் திசையில் அது நகரும்.
மேஜிக் ரகசியம்:
இந்த மேஜிக்கின் ரகசியத்தைப் பார்ப்போமா? குழந்தைகளே, மேஜை மீது பாட்டிலை வைத்து அதன் மீது உறிஞ்சு குழாயை வைக்கும் முன், உங்கள் சட்டையில் அதை பல முறை நன்றாகத் தேய்த்துகொள்ளுங்கள்.
இப்போது அந்த உறிஞ்சு குழாயை உடனே பாட்டில் மீது வைத்து, உங்கள் கை விரலை அதன் ஒரு முனைக்கு கொண்டு சென்று, மெதுவாக உங்கள் விரலை பாட்டிலைச் சுற்றி நகர்த்துங்கள்.
அந்த உறிஞ்சு குழாய் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உங்கள் விரலின் பின்னே வரும்.
இதுதான் மேஜிக். இந்த மேஜிக்கில் எந்த ஜாலமும் இல்லை. அடிப்படை அறிவியல்தான் காரணம். நீங்கள் சட்டையில் உறிஞ்சு குழாயைத் தேய்க்கும்போது, நிலையான மின்சாரம் (ஸ்டாடிக் எலக்ட்ரிக்) உருவாகிறது.
இன்னும் சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், உறிஞ்சு குழாயைச் சட்டையில் தேய்ப்பதால், அது மின்னோட்டமாகி (சார்ஜ்) பாட்டில் மீது வைத்தவுடன் சுழல்கிறது.
மறக்க வேண்டாம், நீங்கள் உறிஞ்சு குழாயை மேஜிக் செய் வதற்கு சில நொடிகள் முன்புதான் சட்டையில் தேய்க்க வேண்டும். அப்போதுதான், அது நன்றாக மின்னோட்டம் பெற்றுச் சுழலும்.
அதனால், உங்கள் நண்பர்கள் முன்னால், அவர்களுக்கு தெரியாமல் பேச்சுக் கொடுத்துக்கொண்டே உறிஞ்சு குழாயைச் சட்டையில் தந்திரமாகத் தேய்க்க வேண்டும்.
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago