அர. செல்வமணி
1. மாலைக் கதிரோன் மங்கியதும்
மறைவில் இருந்து வெளியேறும்
வேலை இரவு முழுவதுமே
விடிந்தால் மீண்டும் மறைந்துவிடும்
உலவி இரவில் எலி பிடித்தே
உழவர்க் குதவும் பறவையது - அது என்ன?
2. ஆவின் மேலே அமர்ந்திருக்கும்
அழகாய் எங்கும் சுற்றிவரும்
தாவிப் பூச்சி பிடித்துண்ணத்
தக்க பொழுதைப் பார்த்திருக்கும்
மேவும் கறுப்பு வண்ணந்தான்
மேனி வெயிலில் மின்னுந்தான்
கவையைப் போன்ற வால்நுனியாம்- அது என்ன?
3. டக்டக் டக்டக் டக்கென்றே
தட்டும் ஒலியும் கேட்கிறதா
எட்டிப் பார்த்தால் மரத்தினிலே
இருப்பேன் பூச்சி பிடிப்பதற்கே
கொட்டும் அலகோ உளிபோலே
கூராய் வலிமை மிக்கதுவே - அது என்ன?
4. வெண்மை நிறத்தில் வயிறிருக்கும்
மேலே கறுப்பு நிறமிருக்கும்
வண்ணம் இரண்டும் சேர்ந்தொன்றாய்
வடிவைக் கூட்டும் மிக நன்றாய்
கொண்டேன் நுனிவால் கவைபோலே - அது என்ன?
5. மணமாம் மலரின் பெயரதனை
வடிவாம் புள்ளும் பெற்றதுவே
கண்கள் சிவப்பு நிறமிருக்கும்
கருத்த உடலே கொண்டிருக்கும்
வண்ணச் சிவப்பு இறகுகளாம்
வாலோ சற்று நீண்டதுவாம் -அது என்ன?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago