படமும் கதையும்: காட்டுக்குள் நுழைந்த மனிதர்கள்

By செய்திப்பிரிவு

அ. வேளாங்கண்ணி

குட்டிக்குப் பெயர் சூட்டும் விழா. விலங்குகள் எல்லாம் ஒன்று கூடிப் பேசிக்கொண்டிருந்தன.

“என்ன ரொம்ப நாளா மனுசங்க யாரும் காட்டுப் பக்கமே வரலையே?” என்று கேட்டது .

“எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கு” என்றது .

“ஏதோ கரோனா என்ற சின்ன உயிரி ஒண்ணு மனுசனுங்களைத் தாக்கிட்டு இருக்காம். அதான் வீட்டை விட்டு வெளியே வரமால் இருக்காங்க” என்றது .

“என்னை, யை எல்லாம் பார்த்துப் பயப்படமாட்டாங்க. எங்களையே கூண்டுக்குள் அடைச்சு வித்தை காட்டுவாங்க. ஒரு சின்ன உயிரிக்கா இப்படிப் பயந்துகிட்டிருக்காங்க?”

“உண்மை தான். கரோனா சாதாரணமானது இல்லை. வேகமா பரவுதாம். சும்மாவே காதுல ஏதோ மாட்டிக்கிட்டு தனியா பேசிட்டு, சிரிச்சிட்டு மனிதர்கள் இருப்பாங்க. இப்ப முகக்கவசம் மாட்டிட்டு சுத்தறாங்க. அவர்களை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை” என்று சிரித்தது .

“அந்த கரோனா இருக்கற வரைக்கும் நம்ம பக்கம் திரும்ப மாட்டாங்க” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது .

“நாம எல்லாம் நிம்மதியா இருக்கக் காரணம் கரோனா. பூமி சுத்தமா இருக்கக் காரணம் கரோனா. காற்று மாசு குறைய காரணம் கரோனா. இந்த மனிதர்களின் கொட்டத்தை அடக்க வந்த கரோனாவுக்கு நன்றி சொல்லணும்” என்றது .

“ரொம்ப சந்தோஷப்படாதீங்க. கரோனாவைத் தடுக்கும் முயற்சியில் மனிதர்கள் தீவிரமா இருக்காங்க. சீக்கிரம் தடுப்பு மருந்து கண்டுபிடிச்சு விரட்டிடுவாங்க” என்றது .

அப்போது ஒன்று வேகமாக ஓடிவந்தது.

“எதுக்கு இப்படி ஓடி வர்றே? இன்னும் விருந்து ஆரம்பிக்கலை” என்று சிரித்தது .

“உன் காமெடி நல்லா இல்லை. காட்டு எல்லையில் பத்து மனுசங்க நுழைஞ்சிருக்காங்க. என்ன செய்யலாம்?” என்றது .

“என்ன... கரோனா பயம் போயிருச்சா அதுக்குள்ளே? ” என்று அதிர்ந்தது .

“இதை எப்படித் தடுப்பது?”

“நான் பார்த்துக்கறேன். களே இங்கே வாங்க” என்று கூப்பிட்ட , ரகசியமாக ஏதோ சொல்லி அனுப்பியது.

விருந்து நடந்துகொண்டிருந்தபோது கள் திரும்பி வந்தன. மனிதர்கள் ஓடிவிட்ட தகவலைத் தெரிவித்தன.

“பிரமாதம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மனுசங்க இந்தப் பக்கம் வரமாட்டாங்க” என்று சிரித்தது .

ஆச்சரியப்பட்ட , “அப்படி என்ன செய்தாய்?” என்று குரங்கைப் பார்த்துக் கேட்டது.

“காட்டுக்குள்ளும் கரோனா வந்துவிட்டதாகக் களைப் பேசச் சொன்னேன். அதைக் கேட்டு மனிதர்கள் ஓடிவிட்டனர்” என்று மீண்டும் சிரித்தது .

அனைத்து விலங்குகளும் குரங்கைப் பாராட்டின. விருந்துடன் விழா இனிதே முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்