மிது கார்த்தி
கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரைத் தொடாமல் உங்களால் வெளியேற்ற முடியுமா?
என்னென்ன தேவை?
பெரிய கிண்ணம்
உறிஞ்சு குழல் (ஸ்டிரா)
கூர்மையான தென்னங்குச்சி (ஸ்டிராவைவிடச் சிறிது)
கத்தரிக்கோல்
பசை டேப்
பேனா
எப்படிச் செய்வது?
# கிண்ணம் முழுவதும் தண்ணீரை ஊற்றுங்கள்.
# உறிஞ்சு குழலின் நடுவே குச்சியைக் குத்தி, அதை அடுத்தப் பக்கத்தில் இழுங்கள்.
# குச்சியும் உறிஞ்சு குழலும் சிலுவைப் போல் இருக்கும்படி வைத்துக ்கொள்ளுங்கள்.
# உறிஞ்சு குழலில் குச்சி குத்திய இடத்திலிருந்து இரு புறமும் ஒன்றரை செ.மீ. தள்ளி பேனாவால் குறித்துக்கொள்ளுங்கள்.
# அளவு குறித்து இடத்தில் கத்தரிக்கோலால் உறிஞ்சுக் குழலை பாதி அளவு நறுக்குங்கள்.
# இரு புறங்களிலும் நறுக்கிய உறிஞ்சு குழலை இப்போது மடக்க முடியும். எனவே உறிஞ்சு குழலை மடக்கி ஒன்று சேருங்கள்.
# உறிஞ்சு குழல் ஒன்று சேரும் இடத்தில் குச்சியோடு சேர்த்துப் பசை டேப்பால் ஒட்டிவிடுங்கள்.
# இப்போது துடுப்புப் போல காட்சியளிக்கும் குச்சியைக் கிண்ணத்தில் விடுங்கள்.
# குச்சியின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொண்டு விரலால் சுழற்றுங்கள். குச்சியைச் சுழற்ற சுழற்ற உறிஞ்சுக் குழலை நறுக்கிய இரு புறங்களிலிருந்தும் தண்ணீர் வேகமாகச் சுழன்று வருவதைக் காண முடியும். என்ன காரணம்?
காரணம்
உறிஞ்சுக் குழலுடன் சேர்த்துக் குச்சியைச் சுழற்றும்போது, அந்தப் பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும். எனவே, சுழற்றும்போது அதிலுள்ள காற்று வெளியேறிவிடுகிறது. இதனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப காற்று முயற்சி செய்யும். ஆனால், காற்று உள்ளே வர வேண்டிய வழியான மறுபக்க உறிஞ்சுக்குழல் தண்ணீரில் மூழ்கி இருப்பதால், தண்ணீரின் மேல் பாகத்தில் காற்றில் அழுத்தம் ஏற்படும். அதன் காரணமாக உறிஞ்சுக் குழலுக்குள் தண்ணீர் சென்று, சிதறடிக்கப்பட்டு வெளியேறுகிறது. இந்தச் செயல் தொடர்வதால், வெற்றிடம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் தண்ணீர் வெளியேறுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago