விழிப்புணர்வு: முகக் கவசம் கொடுக்கும் ராகினிஸ்ரீ

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் மாணவர்களுக்கு முன்னதாகவே விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டார் ராகினிஸ்ரீ. வீட்டிலேயே முகக் கவசம் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.

சிதம்பரத்தில் உள்ள சி. கொத்தங்குடியைச் சேர்ந்த ராகினிஸ்ரீ ஐந்தாம் வகுப்பு மாணவி. “தொலைக்காட்சி செய்திகள் மூலம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முகக் கவசம் அவசியம் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.

தையல் கலைஞரான என் அம்மாவிடம் முகக் கவசம் தைக்கக் கற்றுக்கொண்டு, நானே இந்தப் பகுதி மக்களுக்கு வழங்க முடிவு செய்தேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முகக் கவசங்களைத் தைத்து வழங்கியுள்ளேன்” என்று கூறும் ராகினி, பொது மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.

- ரேணுகா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்