எலியைப் பார்த்திருக்கீங்களா? வீட்டுக்குள்ள திடீர்ன்னு தெரியாம நுழைஞ்சு, அங்கும் இங்கும் பயந்து ஓடும். அம்மா, அப்பாகூட அதை அடிக்கத் துரத்துவாங்க. முன்பெல்லாம் எலியைப் பிடிக்கிறதுக்குன்னு தனியா கூண்டு இருக்கும். இப்ப வீட்டுக்குள்ள எலிகளைக் கொல்றதுக்குன்னு விஷம் (Poison), நாம சாப்பிடுற கேக் மாதிரி, பர்பி மாதிரியெல்லாம் கிடைக்குது.
ஆனால் எலியைக் கொல்றது பாவம். அது நம்மள மாதிரி ஒரு உயிர்தானே. நாம வாழ்ற பூமி, மனுஷங்களான நமக்கு மட்டுமில்லை. எலி, பூனை, பூச்சி, எறும்பு எல்லாத்துக்குமானதுதானே. முடிஞ்சளவு நாம இதுமாதிரியான சிறு பிராணிகளைக் கொல்லாம இருக்கணும். தொல்லை தந்துச்சுன்னா, பிடிச்சு வெளியில விட்டுடணும் சரியா?
‘Ratatouille’ படத்துல ஒரு சுட்டி எலி இருக்கு. அதோட பேரு ரெமி. ரொம்ப புத்திசாலி. பொதுவா எலி என்ன பண்ணும்? நாம சாப்பிட்டுப் போடுற பழங்கள், பிரட் எல்லாத்தையும் எடுத்துத் திங்கும் இல்லையா? ரெமியோட குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் அப்படித்தான். குப்பை தொட்டில ஏறி மனுஷங்க போடுற மீதமான உணவுகளை படபடன்னு எடுத்துச் சாப்பிடுவாங்க.
ஆனால், ரெமி மட்டும் அப்படிச் சாப்பிடாது. முதல்ல மோந்து பார்க்கும். அப்படி மோந்து பார்த்தே அது நல்ல உணவான்னு கண்டுபிடிச்சிடும். அதோட இந்தத் திறமையினால எல்லா எலிகளும் சாப்பிட வேண்டிய உணவைக் கையில் எடுத்து ரெமி கிட்ட போய், ‘இது நல்ல உணவா’ன்னு கேட்கும். அதுவும் மோர்ந்து பார்த்து ‘ஓ.கே’ன்னு சர்டிபிகேட் கொடுத்தாதான் சாப்பிடும்.
அது சரி, இந்த ரெமி எலிக்கு மட்டும் எப்படி இந்தத் திறமை வந்துச்சுன்னு கேட்குறீங்களா? அதுக்குக் காரணம் இருக்கு. ரெமியும் அவுங்க குடும்பமும் வாழ்ற வீட்ல ஓகஸ்ட் கஸ்டேன்னு ஒரு பெரிய சமையல்காரரோட குக் புக் (சமையல் புத்தகம்) இருக்கு. அவர் ரொம்ப புகழ்பெற்ற சமையல்காரர். அடிக்கடி டி.வி.யிலயும் வந்து பேசுவார். ரெமி அதையெல்லாம் ரொம்ப கவனமா பார்த்துச் சமையலும் கொஞ்சம் கற்றிருந்தது. அதுக்குச் சமையல்காரர் ஆகணும்னு லட்சியமும் இருந்துச்சு.
டி.வி.யில அவர் புரோகிராம் வந்தா மெய்மறந்து ரெமி பார்க்கும். அப்படி ஒருநாள் பார்த்துகிட்டே டி.வி. முன்னாடி போயிடுச்சு. அப்ப ரெமிய அந்த வீட்டு ஓனரான ஒரு பாட்டி பார்த்திடுச்சு. அதைப் பார்த்துப் பாட்டி கத்த, பாட்டிய பார்த்து ரெமி கத்த, ஒரே அமர்க்களம் ஆயிடுச்சி. பக்கத்துல இருந்த ரெமியோட அண்ணனையும் பாட்டி பார்த்தும் துப்பாக்கிய எடுத்துச் சுட்டுடுச்சி. ஆனா ரெண்டு பேரும் தப்பிச்சிட்டாங்க.
பாட்டி கோபத்துல சுட்டுக்கிட்ட இருக்க, ரெண்டும் தொங்குற லைட் மேல போய் உட்கார்ந்துகிச்சு. ஆனாலும் பாட்டி சுட்டுகிட்டே இருக்க, லைட் அறுந்து விழுந்துச்சு. அப்புறம் பார்த்தா, அதுக்கு மேல மொத்த எலிக் குடும்பமே இருந்திருக்கு. அவ்வளவும் ஒரே ஓட்டம். ரெமி ஓடுற அவரசத்திலயும் அதோட குக் புக்கை எடுத்து ஓடுது. மற்ற எலிகள் கையில கிடச்ச பொருட்களை வச்சு ஒரு சின்னக் கப்பல் செஞ்சு, பக்கத்துல ஓடுற ட்ரெய்னேஜ்ல (சாக்கடைக் கால்வாய்) குதிச்சு தப்பிச்சுடுதுங்க.
ஆனால் புக் எடுத்துட்டு ரெமி கடைசில வருது. அதுக்குள்ள அந்தக் கப்பல் போயிருது. ரெமி குக் புக்கையே கப்பலாக்கி அவுங்க குடும்பத்துடன் சேர முயற்சி பண்ணுது. மற்ற எலிகளும் ரெமியப் பார்த்துக் காப்பத்த கை குடுக்குதுங்க. ஆனா அதுக்குள்ள அந்தப் பாட்டி மறுபடியும் துப்பாக்கிய கொண்டு சுடுது. அந்த எலிகளோட கப்பல் வேகத்துல போயிருது.
ரெமி தனியா மாட்டிக்குது. ரெமி தன் குடும்பத்துடன் சேர்ந்ததா? இல்லையா?, சமையல்காரனாக ஆகணுங்கிற ரெமியோட லட்சியம் நிறைவேறியதா? என்பதைத் தெரிந்துகொள்ள ‘Ratatouille’ படம் பாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago