காந்தி கொண்டாடிய போராட்டம்

By மிது கார்த்தி

சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15

இன்னும் இரண்டு நாட்களில் சுதந்திர தினம் வரப் போகிறது. பள்ளிக்கூடத்திலும், வீதியிலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருப்பீர்கள் இல்லையா? இந்த நேரத்தில், சுதந்திர தினம் பற்றிய சில சுவையான துணுக்குகளைத் தெரிந்துகொள்வோமா?

l இந்தியா சுதந்திரமடைந்தபோது நம் நாட்டில் 1,100 மொழிகள் இருந்தன. இப்போது 880 மொழிகளே புழக்கத்தில் உள்ளன.

l இந்தியாவுக்கெனத் தேசிய மொழி எதுவும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 343-வது பிரிவின்படி இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளது.

l 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அன்றைய தினம் கல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த மதக் கலவரங்களுக்கு எதிராக நூல் நூற்றபடி பிரார்த்தனையில் இருந்தார். அதோடு உண்ணாவிரதமும் இருந்தார்.

l இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 562 சுதேச மாகாணங்கள் இருந்தன.

l இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏற்றப்பட்டது. கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில்தான் ஏற்றப்பட்டது. அப்போது சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணத்தில் கொடி இருந்தது. மேலே 8 தாமரைப் பூக்கள், கீழே சூரியன், பிறை நிலாவும் இருந்தன.

l தற்போதுள்ள தேசியக் கொடியின் மூவர்ணங்களுக்கும் அர்த்தம் உண்டு. மேலே காவி வண்ணம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கும். நடுவில் உள்ள வெள்ளை வண்ணம் அமைதி, உண்மை, தூய்மையைக் குறிக்கும். கீழே உள்ள பச்சை வண்ணம் நம்பிக்கை, தீரச் செயலைக் குறிக்கும். நடுவில் உள்ள அசோகச்சக்கரம் நீதியைக் குறிக்கும்.

l தற்போதுள்ள தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கய்யா. 1921-ல் வடிவமைத்தார். இக்கொடி 1947-ம் ஆண்டு ஜூலை 22 அன்று தேசியக் கொடியாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

l இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கோவா மட்டும் சுதந்திரம் பெறாமலேயே இருந்தது. ஏனென்றால் கோவா போர்த்துகீசியர் வசம் இருந்தது. 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, இந்திய ராணுவம் தலையிட்ட பிறகு, கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

l இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கோவா மட்டும் சுதந்திரம் பெறாமலேயே இருந்தது. ஏனென்றால் கோவா போர்த்துகீசியர் வசம் இருந்தது. 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, இந்திய ராணுவம் தலையிட்ட பிறகு, கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

l இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது போல இன்னும் 3 நாடுகளும் அன்றைய தினம் தங்களது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகின்றன. இதே நாளில் 1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும், 1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து பஹ்ரைனும், 1960-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து காங்கோவும் விடுதலை பெற்றன.

l இந்தியாவுக்கு விடுதலை அளிக்க ஆங்கிலேய அரசு ஏன் ஆகஸ்ட் 15-ம் தேதியைத் தேர்வு செய்தது? அந்தத் தேதியை அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுதான் தேர்வு செய்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு நேச நாடுகள் படைகளிடம் ஜப்பான் சரணாகதி அடைந்தது அந்தத் தேதியில்தான். அந்த நினைவாக அந்தத் தேதியைத் தேர்வு செய்தார்.

l இந்தியா என்ற அகண்ட நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்த பிறகு இரு சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் மவுண்ட்பேட்டன் பிரபு கலந்துகொள்ள விரும்பினார். அதற்கு வசதியாகப் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டது.

l டெல்லி செங்கோட்டையில் அதிக முறை தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் யார் தெரியுமா? ஜாவஹர்லால் நேரு. இவர் 17 முறை தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்