படமும் செய்தியும்: அட்லாண்டிக் கடல் கிளி

By செய்திப்பிரிவு

ஸ்நேகா

பஃபின் (Puffin) பறவைகளுக்குக் ‘கடல் கிளி’, 'கடல் கோமாளி' என்ற பெயர்களும் இருக்கின்றன. அமெரிக்காவின் வட பகுதியிலும் கனடாவின் கிழக்கு பகுதியிலும் காணப்படுகின்றன.

சிறிய உருவமாக இருந்தாலும் இவற்றின் அலகு கிளியைப் போலவே பெரிதாக இருக்கிறது. அலகு நிறம் மாறக்கூடிய தன்மை கொண்டது. குளிர்காலத்தில் இளஞ்சாம்பல் வண்ணத்திலும் வசந்தகாலத்தில் ஆரஞ்சு வண்ணத்திலும் காணப்படும். அலகின் வண்ணத்தை வைத்தே பெண் பறவை குடும்பம் நடத்த ஆணைத் தேர்ந்தெடுக்கும்.

பெரும்பாலும் கடலின் மேல் பகுதியில் மிதக்கும். உணவு தேவை என்றால் 60 மீட்டர் ஆழம்வரை கடலுக்குள் சென்று ஈல், மீன்களைப் பிடித்துக்கொண்டு வருகிறது கடல் கிளி.

கோடையிலும் வசந்தகாலத்திலும் வட அட்லாண்டிக் தீவுகளில் ஆயிரக்கணக்கான கடல் கிளிகள் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் ஒரே இணையுடன்தான் குடும்பம் நடத்துகின்றன. சில கடல் கிளிகள் 20 ஆண்டுகள் வரை ஒரே இணையுடன் வாழ்ந்திருக்கின்றன.

பெரும்பாலான நேரத்தைக் கடலிலேயே கழிக்கின்றன. நீர்புகாத வண்ணம் இறக்கைகளைப் பெற்றிருப்பதால், உடல் சூடாக இருக்கும். இறக்கைகளை அடிப்பதன் மூலம் தண்ணீரின் மேல் பகுதியிலும் ஆழத்திலும் இவற்றால் செல்ல முடிகிறது.

பெரும்பாலான நேரத்தைக் கடலிலேயே கழிக்கின்றன. நீர்புகாத வண்ணம் இறக்கைகளைப் பெற்றிருப்பதால், உடல் சூடாக இருக்கும். இறக்கைகளை அடிப்பதன் மூலம் தண்ணீரின் மேல் பகுதியிலும் ஆழத்திலும் இவற்றால் செல்ல முடிகிறது.

உணவுப் பற்றாக்குறையால் சில வகைக் கடல் கிளிகள் ஆபத்தை எதிர்கொள்கின்றன. கடலில் மனிதர்களால் ஏற்படும் மாசு காரணமாக, கடல் கிளிகளின் இறக்கைகள் நீர் புகாத தன்மையை இழந்து வருகின்றன. இதன் மூலமும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.

ஒரு நிமிடத்துக்கு 400 தடவை இறக்கைகளை அடிக்கும். மணிக்கு 88 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்