உங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி பூதக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்களா? அந்தக் கதைகளில் பூதம் எப்படி இருக்கும் என்று சொல்லியிருப்பார்களே. பார்ப்பதற்கே பெரிய கொடை மிளகாய் மூக்கு, ஸ்பீக்கர் காது, ஸ்கூல் பேக் ஜிப் மாதிரி வாய் எனப் பார்ப்பதற்கே பயங்கரமாக, மனிதர்களைவிட பெரியதாக இருக்கும் எனச் சொல்லியிருப்பார்கள். அந்த மாதிரிப் பூதங்களுக்கு மனிதர்களைக் கண்டாலே பிடிக்காது; பூதங்கள் மனிதர்களை விட்டுத் தனியாக வாழும்; மனிதர்களைப் பார்த்தால் அப்படியே விழுங்கிவிடும் என்றும் கதையைச் சொல்லிருப்பார்கள்.
அந்த மாதிரியான ஒரு பூதம்தான் ‘ஸ்ரக்’(Shrek). இந்தப் பூதக் கதை ஸ்ரக் என்ற பெயரிலேயே படமாக வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பூதத்தைப் பார்த்தால், பூதங்களைப் பற்றி உங்கள் தாத்தா, பாட்டி சொன்னதெல்லாம் பொய் சொல்லுமளவுக்கு செல்லமான நாய்க்குட்டி மாதிரி இருக்கும். அது சிரிக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அது மட்டுமல்ல இந்தப் பூதம் மனுஷங்களுக்கு உதவும். ஆபத்திலிருந்து எல்லோரையும் காப்பாற்றும்.
அப்படியென்றால் உண்மையில் பூதம் எப்படி இருக்கும்? உண்மையில் பூதம் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு கதைக்காகச் சொல்வதுதான். பூதத்தை வைத்துப் பயங்கரமான கதைகளும் சொல்லலாம். சிரிப்புக் கதைகளும் சொல்லலாம். இங்கே நீங்கள் பார்க்கும் ஸ்ரக், சரியான சிரிப்பு பூதம்.
சரி, இந்த ஸ்ரக் பூதத்தை உருவாக்கியது யார்? நீங்கள்கூட ஒரு பூதத்தை உருவாக்கிவிட முடியும். பென்சில் வைத்துப் படம் வரைவீர்கள் இல்லையா? அப்போது மனிதர்களை வரையும்போது கை, கால், காது, மூக்கு, முகம், தலை எல்லாவற்றையும் உங்கள் கற்பனை போல் இஷ்டம்போல் வரைந்து பாருங்களேன். பூதம் போல ஓவியம் வந்துவிடும். அப்படித்தான் இந்த ஸ்ரக் பூதமும் உருவானது. இதை வில்லியம் ஸ்டேய் என்பவர்தான் உருவாக்கினார்.
இவர் குட்டிப் பையனாக இருக்கும்போதே படம் வரைவதில் ஆர்வமாக இருந்தார். வில்லியமின் அப்பாவும் ஒரு ஓவியர்தான். அதனால் வீட்டில் இருக்கிற கலர் பென்சில்களை வைத்து வில்லியம் ஆசை தீர வரைவார். வில்லியமுக்குச் சிறு வயதில் அவர் படித்த ‘பினோச்சியோ ’ என்ற கதை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. பினோச்சியோ, ஸ்பைடர் மேன் போல ஒரு சாகச வீரன். கார்லோ கேல்லாடி என்பவர்தான் இந்தச் சாகச வீரனான பினோச்சியாவை உருவாக்கினார்.
இந்தப் பினோச்சியோ வீரன் வில்லியமின் மனசுக்குள் புகுந்துகொண்டான். வில்லியம் பெரிய ஆளாக வளர்ந்ததும் அந்த வீரன் ஸ்ரக் வடிவில் உருமாற்றம் அடைந்தான். பினோச்சியோ வீரனைப் போலவே குள்ளமனிதர்களை, வித்தியாசமான விலங்குகளைக் கொடுமைக்கார அரசனிடம் இருந்து காப்பாற்ற ஸ்ரக் சண்டைபோடுவான். இளவரசியைக் குகைக்குள் இருந்து காப்பாற்றுவான். இப்படித்தான் ஸ்ரக் பூதம் தொடக்கத்தில் இருந்தது.
கொஞ்சம் நாட்கள் கழித்து, இந்த ஸ்ரக்கை குழந்தைகளுக்குப் பிடித்த பூதம் போல் வில்லியம் உருவாக்கினார். பெரிய உடம்பு, மொட்டைத் தலை, பொம்மைக் காது, கிண்டர் ஜாய் மூக்கு, பேக் ஜிப் மாதிரி வாய், க்யூட்டான சிரிப்பு என ஸ்ரக் குழந்தைகளின் ஹீரோவாக மாறியது. முதலில் இந்த ஸ்ரக் 1990-ம் ஆண்டில் கதைப் புத்தகமாகத்தான் வந்தது. அந்தப் புத்தகம் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்துபோனதால் டி.வி.யிலும் கதையாக வந்தது; பின்னர் சினிமாவும் எடுத்தார்கள். இந்த ஸ்ரக் கதை, ஐந்து பகுதிகளாக சினிமாவாக வந்துவிட்டது.
ஸ்ரக் பூதம் இளவரசியைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்துக்கொண்டது. இப்போது ஸ்ரக் பூதம் குட்டி பூதங்களுக்கு அப்பாவாகிவிட்டது. இனி, அடுத்த படங்களில் ஸ்ரக் எப்படி வரும், எப்போது வரும் என்பது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஸ்ரக் பூதம் எப்படி வந்தால் உங்களுக்குப் பிடிக்கும்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago