சிறார் நூல்கள் 2019

By செய்திப்பிரிவு

ஆதி

பேரன்பின் பூக்கள்,

சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி

தமிழில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட மலையாளச் சிறார் இலக்கியத்தில், இந்த நூல் நிச்சயமாக ஒரு மைல்கல். முக்கியமான ஒரு கதைத்தொகுப்பாக உள்ள அதேநேரம், மொழிபெயர்ப்பில் இந்தத் தொகுதி தொட்டுள்ள உயரம் நிச்சயமாகப் பெரிது. தமிழில் சிறார் இலக்கியம் எந்தத் திசைநோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கான திசைகாட்டியாக இந்தப் புத்தகம் உள்ளது. இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதின்வயதினருக்கான கதைகள் குறிப்பிடத்தக்கவை

வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 - 24332924

மறக்க முடியாத விலங்குகள்,

ரஸ்கின் பாண்ட், தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ

புகழ்பெற்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் உயிரினங்களைக் குறித்து எழுதிய கதைகளுக்கு வேறெதும் ஈடு சொல்ல முடியாது. வளர்ப்பு விலங்குகள் தொடர்பான கதைகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் ரஸ்கின் பாண்டடின் எழுத்தினுடைய தனி அடையாளங்களான நகைச்சுவை, சுவாரசியம், திருப்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. திகட்டாத ஒரு கதைத் தொகுப்பு.

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, தொடர்புக்கு: 044-28252663

குழந்தைச் செல்வம், l கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தமிழில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே குழந்தைகளுக்கென பிரத்யேகமாகப் பாடல்களைப் புனையத் தொடங்கியவர் கவிமணி. அவருடைய புகழ்பெற்ற பாடலான ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ தொடங்கி பல பாடல்கள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

ஒற்றைச் சிறகு ஓவியா, l விஷ்ணுபுரம் சரவணன்

நமக்கெல்லாம் பறக்க இறக்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? ஓவியாவுக்கும் அப்படிப்பட்ட ஓர் இறக்கை கிடைக்கிறது. அந்த இறக்கையை வைத்துக்கொண்டு சில மாயாஜாலங்களை நிகழ்த்த அவளுடைய நண்பர் குழு முயலும்போது, அந்த இறக்கை காணாமல் போகிறது. அது திரும்பவும் ஓவியாவுக்குக் கிடைத்ததா? சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் பின்னணி கொண்ட மாறுபட்ட மிகைப்புனைவுக் கதை இது.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 - 24332924

தலைகீழ் புஸ்வானம், யெஸ். பாலபாரதி

ராமேஸ்வரத்தில் வாழும் ஐந்து நண்பர்கள் கடற்கரையோரம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு விநோத விண் கல்லைப் பார்க்கிறார்கள். அந்தப் பேசும் விண்கல்லை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். காணாமல் போகும் புதையல் போன்ற அந்தக் கல்லை, பிறகு தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தக் கல் பல அறிவியல் தகவல்களைச் சொல்கிறது. திடீரென்று ஏற்படும் ஒரு பிரச்சினைக்குப் பிறகு அந்தக் கல் என்ன ஆகிறது என்பதே கதை.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

மேலும் சில நூல்கள்

ஏணியும் எறும்பும், உதயசங்கர்

நம்மைச் சுற்றியும் வாழும் எறும்பு, கட்டெறும்பு, கோழி, ஓணான் உள்ளிட்ட உயிரினங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் அடங்கிய தொகுப்பு.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை, மு. முருகேஷ்

நாவல் மரம் பாட்டிக்கு ஒரு கதை சொல்கிறது, அந்தக் கதையைப் பாட்டி குழந்தைகளுக்குச் சொல்கிறார் என மாறுபட்ட வகையில் அமைந்த சிறார் நாவல்.

வெற்றிமொழி வெளியீட்டகம், தொடர்புக்கு: 9715168794

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, கொ.மா.கோ. இளங்கோ

பட்டாம்பூச்சியின் ரகசியக் கோட்டைகள், உயிர்பெறும் ஓவியம், குஞ்சு பொரிக்கும் கனவுகள், காற்று இசைக்கும் பாடல் என வித்தியாசமான கதைகளைக் கொண்ட தொகுப்பு.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 – 24332424

சூப்பர் சிவா, சுகுமாரன்

மாறுபட்ட சூழல்களையும் பிரச்சினையையும் எதிர்கொண்டும்கூட பள்ளிப் பருவத்தைக் கொண்டாடும் சிவா என்று சிறுவனின் கதை.

கிறிஷ் கயல் வெளியீடு, தொடர்புக்கு: 91765 94635

நான்கு கனவுகள், பாவண்ணன்

எழுத்தாளர் பாவண்ணன் குழந்தைகளுக்கும் எழுதி வருகிறார். விலங்குக் கதைகள், கற்பனைக் கதைகள் நிறைந்த இந்தப் புத்தகத்தில் சிறார்களே கதாபாத்திரங்களாக வரும் கதைகளும் உண்டு.

நெஸ்லிங் புக்ஸ், தொடர்புக்கு: 044-26251968

இந்து தமிழ் திசை வெளியீடுகள்

உடல் எனும் இயந்திரம், டாக்டர் கு. கணேசன்

மனித உடல் குறித்த மருத்துவ அறிவியல் மிகவும் சுவாரசியமானது. இதயத்தில் ஓடும் மின்சாரம், உடலுக்குள் ஒரு மிக்ஸி, வாய்க்குள் குகை, இயற்கை கேமரா, உயிர் திரவம், உடலின் காவலர்கள், கழுத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி என்று ஒவ்வோர் உறுப்பு குறித்தும் மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். மாணவர்கள், ஆசிரியர்களிடம் தொடராகவும் புத்தகமாகவும் வரவேற்பு பெற்றது.

பாரதியின் பூனைகள், மருதன்,

’இடம் பொருள் மனிதர் விலங்கு’ என்ற பெயரில் தொடராக வந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் என அனைவரின் வரவேற்பைப் பெற்ற 25 கட்டுரைகளின் தொகுப்பு. பாரதி, சாவித்ரிபாய் புலே, மக்சிம் கார்கி, லூயி பிரெய்ல், ஐன்ஸ்டைன், மொசார்ட், நியூட்டன், கபீர், புத்தர், தாகூர் என ஒவ்வொரு கட்டுரையும் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கிறது!

தொடர்ப்புக்கு 74012 96562

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்