அறிவியல் மேஜிக்: கவிழ்த்தாலும் கொட்டாத தண்ணீர்!

By செய்திப்பிரிவு

மிது கார்த்தி

டம்ளரில் உள்ள தண்ணீரைத் தலைகீழாகக் கவிழ்த்தாலும் தண்ணீர் கொட்டாது. ஒரு சோதனையைச் செய்வோமா?

என்னென்ன தேவை?
கண்ணாடி டம்ளர்
தண்ணீர்
தடித்த காகித அட்டை

எப்படிச் செய்வது?
* கண்ணாடி டம்ளரை மேசையின் மீது வையுங்கள்.
* டம்ளரின் விளிம்புக்குச் சற்றுக் குறைவாகத் தண்ணீரை ஊற்றுங்கள்.
* மொபைல் போனைவிடச் சற்றுப் பெரிதான அட்டையை அதன் மீது வையுங்கள்.
* இப்போது அட்டையின் மீது ஒரு கையை வைத்து நன்றாக அழுத்திக்கொண்டு அப்படியே தலைகீழாக டம்ளரைக் கவிழுங்கள்.
* அட்டையிலிருந்து சட்டெனக் கையை எடுத்துவிட வேண்டாம். மெதுவாகக் கையை எடுங்கள்.
* இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட டம்ளரில் உள்ள தண்ணீர் அப்படியே இருப்பதைக் காணலாம். தண்ணீர் கீழே கொட்டாமல் காகித அட்டைத் தடுப்பதையும் பார்க்கலாம்.

புவியீர்ப்பு விசைக்கு மாறாகத் தண்ணீர் கீழே கொட்டாமல் இருப்பது எப்படி?
காரணம்:
இந்தச் சோதனையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிவிடுவதால், காற்று இல்லாமல் இருக்கிறது. அதேவேளையில் கண்ணாடி டம்ளரின் வெளிப்புறத்தில் காற்றழுத்தம் இருக்கும். வெளிப்புறக் காற்றழுத்தமானது கண்ணாடி டம்ளரில் இருக்கும் நீரின் அழுத்தத்தைவிட அதிகமாக இருக்கும். இதிலுள்ள கூடுதல் காற்றழுத்தமானது கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரைக் காகித அட்டையைத் தாண்டி கீழே கொட்டாமல் பிடித்துக்கொள்கிறது. இதனால்தான் புவியீர்ப்பு விசைக்கு மாறாகத் தண்ணீர் கீழே கொட்டாமல் இருக்கிறது.

பயன்பாடு
நீர் சுத்திகரிப்பு டேப்புகளில் இந்தத் தத்துவம் செயல்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்