கண்ணாடி முன் அடிக்கடி நின்றால் கட்டி வரும் என்கிறாரே அம்மா, உண்மையா, டிங்கு?
-ஆர். ஹரிஹரன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.
உருவம் குறித்த உங்களது ஆர்வத்தைக் கொஞ்சம் குறைப்பதற் காகவோ, மற்றவர்களுக்கும் கண்ணாடி பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ அம்மா இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், கண்ணாடி முன் அடிக்கடி நிற்பதால் கட்டி வரும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை, ஹரிஹரன்.
-வீணாமதுரபாஷினி, 7-ம் வகுப்பு, பணகுடி, திருநெல்வேலி.
மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆமை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வருவதுபோல், மண்ணில் புதைத்து வைக்கும் கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவராது. பறவைகளின் குஞ்சுகளுக்குத் தாயின் கதகதப்பு அவசியம். தாய் அடைகாக்கும்போதுதான் குறிப்பிட்ட வெப்பநிலையில் முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வரும். கோழி முட்டையை மண்ணில் புதைத்து வைத்தால் அழுகி, மட்கிப் போய்விடும், வீணாமதுரபாஷினி.
விமானத்தில் இருக்கும் ’கறுப்புப் பெட்டி’ மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன், டிங்கு?
-அருண், 8-ம் வகுப்பு அரசு உயர்நிலைப் பள்ளி, வெள்ளமடம், குமரி.
கறுப்புப் பெட்டிக்கும் விமானத்தின் இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. விமானம் பறக்கும்போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுவிட்டால், எந்தக் காரணத்தால் விபத்து நடந்தது என்பதை அறிந்துகொள்ளவும் எதிர்காலத்தில் அந்தத் தவறு நிகழாமல் தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் சாதனம்தான் ‘கறுப்புப் பெட்டி’. பயணிகள் விமானத்தில் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கின்றன. ஒன்று விமானத்தையும் இன்னொன்று விமானியையும் கவனிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
விபத்து நிகழ்ந்து தரையில் விமானம் விழுந்தால், தீப்பற்றி எரியும். அப்போது எல்லாம் கறுப்பாக மாறிவிடும். ‘கறுப்புப் பெட்டி’ கறுப்பாக இருந்தால், அதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும் என்பதால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் தயாரிக்கப்படுகிறது. பிறகு ஏன் கறுப்புப் பெட்டி என்றால், நேரடியாக ஓர் அமைப்பின் செயல்பாட்டுக்குத் தொடர்பில்லாத (கறுப்புப் பெட்டி இல்லாவிட்டாலும் விமானம் பறக்கும்) எந்தக் கருவியையும் ‘கறுப்புப் பெட்டி’ என்றே அழைக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பெயர், அருண்.
விதையில்லாத திராட்சை போன்ற பழங்களில் இருந்து எப்படிப் புதியச் செடிகள் உருவாகின்றன, டிங்கு?
-இள. தமிழ்சக்தி, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
விதையில்லாத பழங்கள் என்று சொன்னாலும் அவற்றில் மென்மையான சிறிய விதைகள் இருக்கவே செய்கின்றன. விதையில்லாத திராட்சை, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களில் இப்படிப்பட்ட விதைகளைப் பார்த்திருக்கலாம். விதையில்லாத பழங்கள் உருவாகுவதற்கு மரபணுக் குறைபாடே காரணம். மரபணுக் குறைபாட்டால் விதைகளைச் சுற்றித் தடித்த தோல் வளர்வதில்லை. இதனால் இந்த மென்மையான விதைகளைச் சாப்பிடும்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாததால், விழுங்கிவிடுகிறோம்.
ஐஸ்க்ரீம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என் அப்பா சாப்பிட அனுமதிப்ப தில்லையே ஏன், டிங்கு?
-கா. காளிமுத்து, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அக்கச்சிப்பட்டி.
தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் உடலுக்குத் தீங்கை விளைவிக் கலாம் என்பதற்காக, அப்பா அனுமதிக்காமல் இருந்திருப்பார். உங்கள் உடலுக்குப் பிரச்சினை இல்லை என்றால், எப்பொழுதாவது ஐஸ்க்ரீம் கேட்டால் அப்பா மறுக்க மாட்டார், காளிமுத்து.
நீ சூரிய கிரகணத்தைப் பார்த்திருக்கிறாயா? டிசம்பர் 26 அன்று நிகழும் சூரிய கிரகணத்தைப் பார்க்கப் போகிறாயா, டிங்கு?
-ர. பிரசாந்த், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
ஓ… பல முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய சின்ன வயதில் இன்று இருக்கும் அளவுக்குக்கூட சூரிய கிரகணம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. கிரகணத்தின்போது எங்கள் தெருவே காலியாக இருக்கும். வீடுகளில் கதவு, ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கும். ஆனால், எங்கள் வீட்டில் வழக்கம்போல் எல்லா வேலைகளும் நடக்கும். மொட்டை மாடிக்குச் சென்று, சூரியக் கண்ணாடிகள் மூலம் கிரகணத்தின் அழகை ரசிப்போம்.
இந்த அரிய வாய்ப்பை மற்றவர்கள் பயன்படுத்தவில்லையே என்று தோன்றும். எங்களைப் பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக சூரிய கிரகணம் பார்க்க மக்கள் வந்தனர். இன்றோ அது வானியல் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் அவசியம் சூரியக் கண்ணாடி மூலம் கிரகணத்தைக் கண்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன், பிரசாந்த்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago