ஏற்கெனவே சொல்லிக்கொடுத்த மேஜிக்குகளைச் செய்து பார்த்தீர்களா? இன்று டென்னிஸ் அல்லது பிங்பாங் பந்தை மறைய வைக்கும் மேஜிக்கை செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
ஒரு நாணயம், டென்னிஸ் பந்து / பிங் பாங் பந்து, மூன்று டிஷ்யு பேப்பர்கள்.
எப்படிச் செய்வது?
1. மேஜைக்கு எதிரே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொள்ளுங்கள்.
2. இப்போது மேஜையின் மீது நாணயத்தை வையுங்கள். அதன் மேல் டென்னிஸ் பந்தை வையுங்கள்.
3. அந்தப் பந்தின் மீது மூன்று டிஷ்யு பேப்பரைப் போர்த்தி அதை மூடுங்கள்.
4. பந்தை மூடியுள்ள டிஷ்யு பேப்பர்களை உங்கள் கையால் வேகமாக அடியுங்கள். அதன் பிறகு டிஷ்யு பேப்பரை விலக்கிப் பார்த்தால் அங்குப் பந்து இருக்காது. பந்து காணாமல் போய், நாணயம் மட்டுமே மேஜையில் இருக்கும். பந்து மாயமானதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவார்கள்.
மேஜிக் எப்படிச் சாத்தியம்?
5. அதாவது, நாணயத்தின் மீது பந்தை வைத்து டிஷ்யு பேப்பரால் மூடுவீர்கள் இல்லையா? முதல் இரண்டு முறை டிஷ்யு பேப்பரால் மூடும்போது, காசு மேஜையில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகப் பேப்பரோடு சேர்ந்து பந்தை உங்கள் பக்கமாக இழுத்துப் பார்வையாளர்களுக்குக் காட்டுங்கள்.
6. மூன்றாவது முறை உள்பக்கமாக இழுக்கும்போது சாமார்த்தியமாகப் பந்தை உங்கள் மடியில் விழ வைக்க வேண்டும். இது எதிரே இருப்பவர்களுக்குத் தெரியாத வகையில் வேகமாக நடைபெற வேண்டும். அதேசமயம் பந்து இல்லாமலேயே பந்து இருப்பது போல நாணயத்தின் மீது பேப்பரைக் குமிழ்போல வைக்கவும் வேண்டும்.
இதுவே பந்தை மறையச் செய்யும் மேஜிக் . மடியில் விழும் பந்தை, கீழே விழாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago