அலகே அழகு!

By ஷங்கர்

கிளிகள் என்றால் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? கிளிகள் பற்றி நிறையத் தகவல்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

#உலகில் 372 கிளி வகைகள் உள்ளன.

#பெரும்பாலான கிளி வகைகள் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

#வளைந்த அழகான அலகும், பளீர் வண்ணமும், உறுதியான கால்களும் கிளிகளுக்கு அழகு சேர்க்கின்றன.

#பறவை இனங்களில் புத்திக் கூர்மை கொண்டவை கிளிகள்.

மனிதர்களின் குரல்களைக் கேட்டு அவர்களைப் போலவே ஒலி எழுப்பும் ஆற்றல் பெற்றவை கிளிகள். சில வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால் அதைத் திருப்பிச் சொல்லும்.

#பெரும்பாலான கிளிகள், பழக் கொட்டைகளையே அதிகம் உண்கின்றன. சில வகை கிளி இனங்கள் பழங்கள், தேன், மலர்கள், சிறு பூச்சிகளையும் சாப்பிடும்.

#‘பட்ஜ்ரிகர்’ ‘காக்கடீல்’ இனங்கள் கிளிகளில் மிகப் பிரபலமானவை.

#சில வகைக் கிளிகள் 80 வயது வரைகூட வாழும்.

#வண்ணக் கொண்டை உடைய அழகிய ‘காக்கட்டூ’ வகை கிளிகளில் 21 வகை உண்டு.

#நியூசிலாந்தில் அரிய வகை கிளி இனங்களான கீ, ககா, ககாபோ இனங்கள் காணப்படுகின்றன.

#‘கீ’ வகை கிளிகள் குண்டான உடல் கொண்டவை. புத்திக் கூர்மையும் அதிகம். இந்த வகை கிளிகள் நியூசிலாந்தின் சவுத் ஐலாண்டில் காணப்படுகின்றன.

#அல்பைன் இனப்பறவைகளில் எஞ்சியிருப்பவை கீ வகை கிளிகளே. இந்தக் கிளிகள் இங்கு வரும் பயணிகளின் பைகளைத் திறந்து பார்க்கும். சிறுபொருட்களைத் திருடும். வாகனங்களைச் சேதப்படுத்தும்.

#ககாபோ வகை கிளிகள் குறைந்துகொண்டே வருகின்றன. 2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 130 பறவைகளே உலகில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை இரவில் உற்சாகமாகக் காணப்படும். கொட்டைகள், பழங்கள், தாவர உணவுகளைச் சாப்பிடும்.

#கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.

#கிளிகளின் எடை 10 கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரைக்கும் இருக்கும்.

# 8 சென்டிமீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளில் கிளிகள் காணப்படுகின்றன.

# ஆப்பிரிக்க சாம்பல் ஆண் கிளிகள், மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் திறமை வாய்ந்தவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்