குழந்தைப் பாடல்: திருவிழா

By அழ. வள்ளியப்பா

திருவிழாவாம் திருவிழா!

தேரிழுக்கும் திருவிழா!

ஒருமுகமாய் மக்களெல்லாம்

ஒன்று கூடும் திருவிழா.

பட்டு ஆடை உடுத்தலாம்;

பாட்டி கையைப் பிடிக்கலாம்;

கொட்டு மேளம் கேட்டதும்

குடுகுடென்று ஓடலாம்.

ஆனை, குதிரை பார்க்கலாம்;

அதிர் வேட்டுக் கேட்கலாம்.

சேனை போல யாவரும்

திரண்டு கூடிச் செல்லலாம்.

தேரில் சாமி வந்ததும்

தேங்காயோடு போகலாம்.

ஊராரோடு நாமுமே

உடைத்து வைத்து வணங்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்