தேனீக்கு வந்த ஆபத்து

By ஜெய்

தேன் (Honey) சாப்பிட்டிருக்கீங்களா? பிரட்ல தடவி சாப்பிடலாம். தனியாவும் சாப்பிடலாம். தாத்தா, பாட்டிங்க நாட்டு வைத்திய மருந்து சாப்பிடும்போது தேன் கலந்து சாப்பிடுவாங்க. உடம்பு சரியில்லைனா, அம்மா, அப்பா மாத்திரை (Tablet) கொடுப்பாங்க. அதைச் சாப்பிடும்போது உங்களுக்கு கசக்கும்ல. உடனே அம்மா, அப்பா சர்க்கரை (Sugar) கொடுப்பாங்கல்ல. சர்க்கரைக்குப் பதிலா இந்தத் தேன் சாப்பிடலாம். தித்திக்கும்! உடம்புக்கும் நல்லது.

சரி இந்தத் தேன் எங்கிருந்து கிடைக்கும்னு தெரியுமா? பிஸ்கட், சாக்லேட் மாதிரி கம்பனியில தயாரிக்கிற பொருளா? கிடையாது. ரோஜா, மல்லிகைப் பூ அப்புறம் உங்க ஸ்கூல்ல வச்சிக்குற குட்டிச் குட்டிச் செடிகள்ல பூக்குற பூக்களின் நடுவுல கொஞ்சூண்டு தேன் இருக்கும். இந்தக் கொஞ்சூண்டு தேனை எல்லாம் ஈ மாதிரி இருக்கிற தேனீக்கள் (Honey Bee) சேர்ந்து ஒரு கூட்டுல சேர்த்துவைக்கும். அந்தக் கூட்டைத் தேன் தட்டு (honeycomb)ன்னு சொல்வாங்க. அந்தத் தட்டை எடுத்துப் பிழிஞ்சா தேனா கொட்டும். அதைத்தான் பாட்டில்ல அடச்சு விக்கிறாங்க.

சரி கதைக்கு வருவோம். ‘Bee Movie’ன்னு ஒரு படம் ஒரு குட்டி தேனீயப் பத்துனது. அந்தத் தேனீ பேரு பென்சன். அது நல்லா படிச்சு காலேஜ் எல்லாம் போகுது. காலேஜூ முடிச்ச பிறகு வேலைக்குப் போணும்ல. அப்போ அதுக்கு வேலை கிடைக்குது. அது தேன் சேகரிக்கிற ஒரு கம்பனி. அது மட்டுமில்லாம மனுஷங்க கிட்ட தேனீக்கள் தப்பிகிறதுக்கான ஹெல்மட், ஷு எல்லாம் கூட அங்க தயாரிக்குறாங்க. அங்க பென்சன் தேனீயும் அவனோட ஃப்ரண்ட் ஆதாம் தேனீயும் சேர்றாங்க. முதல்ல பென்சனுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தாலும் சாகும் வரை ஒரே வேலையைத்தான் திரும்பத் திரும்ப செய்யணும்கிறது பிடிக்கலை. அப்போ வெளில போய் தேன் எடுக்கிற வேலையைச் செய்யுற தேனீக்களோட ஃப்ரண்ட்ஷிப் பிடிச்சு அதுங்களோட வெளில போகுது. வெளில பறந்து போகுறது அதுக்கு சந்தோஷமாக இருக்கு.

அந்தத் தேனீக்கள் எல்லாம் சேர்ந்து பூக்கள் மேல உட்கார்ந்து தேனை எடுக்குது. அப்படித் தேனை எடுத்துத் திரும்பும்போது டென்னிஸ் விளையாடுற இடத்துல எல்லா தேனீக்களும் ரெஸ்ட் எடுக்குதுங்க. நம்ம பென்சன் தேனீயும் ரெஸ்ட் எடுக்குது. அப்போ அங்க கிடக்குற டென்னிஸ் பந்தை பூன்னு நினைச்சுக்குகிட்டு ஒரு தேனீ தொட்டு பாக்குது. டென்னிஸ் பந்து மேல பஞ்சு மாதிரி இருக்கும். தேனீயோட கை சின்னதா இருக்கும்ல, அதனால பஞ்சுல சிக்கிக்குது. ஆனா அது எப்படியோ கஷ்டபட்டு கைய எடுத்துடுது. ஆனால் பென்சன் தேனீ அந்தப் பந்து மேலேயே உட்கார்ந்துவிடுது. அதோட கை, கால் எல்லாம் சிக்கிடுது. அப்போ ஒரு மனுஷன் அந்தப் பந்தை எடுத்து டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சுடுறான். டென்னிஸ் பந்து அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பறந்து, பறந்து வருது. பென்சன் தேனீ ‘ஆ..ஓ…’ன்னு ஒரே கத்து. மனுஷன் வேகமா அடிக்க, பந்து கிரவுண்ட தாண்டி ரோட்ல விழுந்துருது. பென்சன் பந்துல இருந்து விடுபட்டு கார் மேல போய் மோதி காரோட இஞ்சின் உள்ள போயிடுது. அங்க இருந்து தப்பிச்சி காருக்குள்ள போகுது. கார்ல இருக்கிற மனுஷங்க அதை அடிக்கப் பார்க்க, அங்கிருந்து தப்பிச்சி மேல வருது.

‘அப்பாடா’ன்னு பெரு மூச்சு விடுறதுக்குள்ள மழை பெஞ்சு அதோட இறக்கைகள் (Wings) எல்லாம் நனைஞ்சு அதால பறக்க முடியாம போகுது. அப்புறமா ஒரு வீட்டோட ஜன்னலுக்கு உள்ளே போய் விழுது. அது கண்ணாடி ஜன்னல். மழை பெய்யுறதால அந்த வீட்ல உள்ள மனுஷன் ஜன்னல் கதவை மூடிடுறான். கண்ணாடின்னு தெரியாமா மோதி பென்சனுக்கு மூக்கு அடிபடுது. அப்புறம் வீட்ல எரியுற லைட்டைப் பார்த்து சூரியன்னு நினைச்சு, அங்க வெளிச்சம் இருக்குன்னு நினைச்சு தப்பிக்க முயற்சி பண்ணி, மோதி டேபிள்ல இருந்த சாப்பாட்டுக்குள்ள விழுந்திடுது. அத ஒரு மனுஷன் சாப்பிடப் போறான். இன்னொரு மனுஷன் தேனீயப் பார்த்து அதைத் தட்டிவிட, பென்சன் கீழே விழுந்து எழுறதுக்குள்ள, கைல இருந்த புக்கால பென்சனை அடிக்க கை ஓங்குகிறான்.

இப்படி ஒவ்வொரு ஆபத்தா வருது. இதிலிருந்து பென்சன் தப்பித்ததா, இல்லையா என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்