காணாமல் போகும் உறுமல்

By ஆதி

சர்வதேச புலி நாள்: ஜூலை 29

கிர் காடுகளைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. இன்றைக்கு உலகத்துலேயே அங்க மட்டும்தான் ஆசிய சிங்கம் இருக்கு, ஆனா, ஒரு காலத்துல ஐரோப்பாவை தொட்டுக்கிட்டு இருக்குற துருக்கியில் இருந்து, நர்மதை ஆறு வரையிலான பரந்த பகுதியில் ஆசிய சிங்கம் கம்பீரமாக கர்ஜித்துக்கொண்டு வாழ்ந்துவந்தது. ஆனா, ஆசிய சிங்கங்கள் தீவிரமா வேட்டையாடப்பட்டன. அது வாழ்ந்த காடுகள் விவசாய நிலங்களா மாற்றப்பட்டன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்த ஆசிய சிங்கங்கள், இன்றைக்கு குஜராத்தின் கிர் காடுகள்ல மட்டுமே எஞ்சியுள்ளன. ஆசிய சிங்கங்கள் சந்திச்ச இந்த மோசமான நிலையில்தான், வேங்கைப் புலியும் இன்னைக்கு இருக்கு.

சிந்து சமவெளி சின்னங்கள்

இன்னைக்கு 1,500-க்கும் குறைவான புலிகளே நம் காடுகளில் வாழ்ந்துவருகின்றன. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆசியக் காடுகளில் ஒரு லட்சம் புலிகள் இருந்ததாகப் பதிவுகள் சொல்கின்றன. அப்படின்னா, அதுக்கு முன்னாடி எவ்வளவு புலிகள் இருந்திருக்கும்?

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுவதுமே அடர்ந்த காடா இருந்துச்சு. அந்தக் காடுகளில் புலி வாழ்ந்தது என்பதை நிரூபிக்கின்றன, சிந்து சமவெளி சின்னங்கள். இரண்டு புலிகளோடு ஒரு மனிதன் சண்டையிடும் சின்னமும், புலி நடந்துபோகும்போது மரத்தின் மீது மனிதன் அமர்ந்திருக்கும் சின்னங்களும் இதில் முக்கியமானவை.

அந்தக் காலத்தில் புலி வேட்டையாடப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை. அதேநேரம் கி.மு. 250 வாக்கில் அசோகர் நாட்டை ஆண்டபோது, மரம் நட்டார், குளம் வெட்டினார் என்றெல்லாம் படிக்கிறோம். அது மட்டுமில்லாம ‘மக்களைப் பாதுகாப்பதுடன், காடுகளில் வாழும் சில உயிரினங்களை வேட்டையாடுவதை தடுப்பது, உயிரினங்களை சித்திரவதைச் செய்வதைத் தடுப்பதும் அரசின் கடமை'ன்னு அசோகர் சொல்லியிருக்கார்.

மைசூர் புலி

அசோகர் இயற்கையை நேசித்தது போலவே, புலிகளை அதிகம் நேசித்த இன்னொரு மன்னர், மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான். அவருடைய அரசுச் சின்னமே புலிதான். தனது வீரர்களுக்கு புலி போன்ற உடையைக் கொடுத்த அவர், ஆயுதங்களிலும் தனக்குப் பிடித்த விஷயங்களில் புலி முத்திரையைப் பதித்தார்.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட ஆரம்பித்த அவர், "200 ஆண்டுகளுக்கு செம்மறியாடாக வாழ்வதைவிட, இரண்டு நாள் புலியாக வாழ்வதையே விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டிருக்கார்.

ஃபிரெஞ்சு பொறியாளர்களின் துணையுடன் ஓர் இயந்திரப் புலியை உருவாக்கி தன் அரண்மனையில் வைச்சிருந்தார். அந்தப் புலி லண்டன் விக்டோரியா, ஆல்பர்ட் அருங்காட்சியகத்துல இப்போ இருக்கு.

ஐந்து நாளுக்கு ஒரு புலி

மற்றொருபுறம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெள்ளையர்களும், உள்நாட்டுக் குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் காடுகளில் புலிகளை வேட்டையாடுறதை மிகப் பெரிய பொழுதுபோக்கா வைச்சிருந்தாங்க. நாடு விடுதலை பெற்ற பிறரும் புலி நிற்கவில்லை. 1960-கள்ல கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்குப் போயிருச்சு புலி. 1972-கள்ல 1,800 புலிகளே இந்தியக் காடுகள்ல இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்