பொம்மை செய்வோம்: புசுபுசு குட்டி ஆடு!

By மோ.வினுப்பிரியா

வீட்டில் விதவிதமாகக் கரடி பொம்மைகளை நிறைய வைத்திருப்பீர்கள். பஞ்சில் செய்யப்பட்ட பொம்மைகள் வீட்டில் இருக்கிறதா? இல்லை, என்றால் கவலையே வேண்டாம். இதோ, இப்போதே அழகாக ஒரு செம்மறியாடு பொம்மையைச் செய்து பார்க்கிறீர்களா?

என்னென்ன தேவை?

# பஞ்சு

# கண்மணிகள்

# கத்தரிக்கோல்

# கருப்பு காகிதம்

# பசை.

# மூன்று கிளிப்

# ஒரு காகிதக் கப்

எப்படிச் செய்வது?

# காகித கப்பை எடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியபடி மூன்று கிளிப்புகளை அந்த கப்பின் மீது மாட்டுங்கள்.

# கப்பைச் சுற்றிப் பஞ்சை பசை கொண்டு ஒட்டுங்கள்.

# பஞ்சை சிறிய அளவு எடுத்து அதை உருண்டையாக உருட்டிக்கொள்ளுங்கள், அதை கப்பின் ஒரு பகுதியில் ஒட்டிக்கொள்ளுங்கள். இதுதான் ஆட்டின் முகம்.

# இப்போது இரண்டு கண்மணிகளை எடுத்து ஆட்டின் கண்களாக முகத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.

# கருப்பு காகிதத்தைக் காது, வாய் பகுதியாக வெட்டி படத்தில் காட்டியபடி பசை கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.

# இப்போது அழகான செம்மறியாடு பொம்மை கிடைத்துவிட்டதா? அதை வைத்து நீங்கள் விளையாடலாமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்