பள்ளிக்கூடத்தில் பிறந்த பாட்டு!

By ஜே.கே

பிறந்தநாள் அன்னைக்கு என்ன செய்வீங்க? புது சட்டை போடுவீங்க; கோயிலுக்கு போவீங்க. ப்ரெண்ட்ஸூக்கு சாக்லெட் வாங்கித் தருவீங்க. அப்புறம் வீட்டுல கேக் வெட்டுவீங்க இல்லையா? கேக் வெட்டுறப்ப கூடி இருக்குறவங்க ‘ஹேப்பி பர்த் டே டூ யூ... ஹேப்பி பர்த் டே டூ யூ...’ன்னு பாடுவாங்க இல்லையா?

உங்களுக்கும்கூட எந்த ரைம்ஸ் தெரியுதோ இல்லையோ இந்த பர்த் டே ரைம்ஸ் கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே. இப்படிப் பிறந்த நாள் கொண்டாடுறவங்க வீட்டுல எல்லாம் ஒலிக்கும் இந்த ஹேப்பி பர்த் டே பாட்டுக்கு என்னைக்குப் பிறந்த நாளுன்னு தெரியுமா?

பிறந்தநாள் ஹேப்பி பர்த் டே பாட்டு 1893-ம் வருஷம்தான் பிறந்துச்சி. பிறந்ததுன்னா, நாம பிறந்த மாதிரி இல்ல. அந்தப் பாட்டை கண்டுபிடிச்சவங்க இருப்பாங்க இல்லையா? அவுங்க பேரு பேட்டி ஹில்.

பேட்டி ஹில்லும் அவுங்களோட தங்கை மில்ரெட் ஜே ஹில்லும் சேர்ந்துதான் இந்தப் பாட்டை எழுதியிருக்காங்க. இவுங்க ரெண்டு பேரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவங்க. இவுங்க பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்தவங்க.

தினமும் காலையில இவுங்க பள்ளிக்கூடத்துக்கு வரப்ப பசங்க எல்லாம் எந்திரிச்சு ‘குட் மார்னிங் மிஸ்’ன்னு சொல்வாங்க. நீங்களும் உங்க மிஸ் வரும்போது இப்படி சொல்லுவீங்க இல்லையா? பதிலுக்கு அவுங்களும் குட் மார்னிங் சொல்லுவாங்கதானே? ஆனால், பேட்டி ஹில்லும் மில்ரெட் ஹில்லும் அப்படி பதிலுக்குச் சொல்ல மாட்டாங்க. அதைப் பாட்டாவே படிச்சிட்டாங்க. எப்படி பாட்டா படிச்சாங்க தெரியுமா?

“குட் மார்னிங் டூ யூ

குட் மார்னிங் டூ யூ,

குட் மார்னிங், டியர் சில்ரன்.

குட் மார்னிங் டூ யூ”

பிடிச்சிருக்கா? இந்தப் பாட்டு குட்டிப் பசங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்க பள்ளிக்கூடம் முழுக்கப் பாடிக்கிட்டே போனாங்க. வீட்லயும் போய் அம்மா, அப்பாகிட்ட பாடிக் காட்டுனாங்க. அவுங்களுக்கும் அது பிடிச்சிருந்துச்சி. இந்தப் பாட்டு எல்லோருக்கும் பிடிச்சுப் போனதால அதே மெட்டுல, ‘‘ஹேப்பி பர்த் டே டூ யூ... ஹேப்பி பர்த் டே டூ யூ...’ பாட்டையும் பேட்டி ஹில்லும் மில்ரெட் ஹில்லும் சேர்ந்து எழுதிப் பாடுனாங்க.

இந்த ‘ஹேப்பி பர்த் டே டூ யூ’பாட்டு, ‘குட் மார்னிங்’ பாட்டைவிட ரொம்பவும் எல்லோருக்கும் பிடிச்சிருந்துச்சி. இப்ப வரைக்கும் உலகத்துல அதிகமா பாடுன ஆங்கிலப் பாட்டு இதுதான்.

இந்தப் பாட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்துலயும் இடம் பிடிச்சிருக்கு. பர்த் டே அன்னைக்கு பெரியவங்களைகூட பர்த் டே பேபின்னு சொல்லுவாங்க. இந்தப் பாட்டு பாடினா தாத்தா, பாட்டிங்ககூட குட்டிப் பசங்களா மாறிடுவாங்க.

இந்தப் பாட்டு அப்படி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்