பென்சிலால் எழுதுகிறோம். ஒரு இடத்தில் தப்பாக எழுதிவிட்டோம், என்ன செய்வது? இருக்கவே இருக்கிறது எரேசர் என்றுதானே தோன்றுகிறது? இன்று நாம் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ரப்பர் கண்டுபிடிப்புக்குப் பின்னால் பெரிய கதையே இருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் எரேசர்ஸ் எனப்படும் ரப்பர்கள், செயற்கை ரப்பரில் இருந்து செய்யப்படுகின்றன. சரி, ரப்பர் மட்டும் பென்சில் கறையை எப்படி நீக்குகிறது? ரப்பர், காகிதத்தைவிட அதிக ஒட்டும்தன்மை கொண்டது. அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்துத் தேய்க்கும்போது, காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராஃபைட் (பென்சில் முனை கிராஃபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில் ஒட்டிக்கொள்கிறது. அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து, சுத்தமாகிவிடுகிறது.
இப்போது நாம் பயன்படுத்தும் ரப்பர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் காகிதத்தில் பென்சில் அல்லது மரக்கரியால் எழுதியதை அழிக்க மெழுகு போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தினார்கள். பர்ச்மெண்ட், பாப்பிரஸ் தாள்களில் இங்க் பேனாவால் எழுதியதை மணல்கற்கள், பியூமிஸ் போன்ற மாவுக்கற்களை வைத்துத் தேய்த்து அழித்தார்கள்.
இப்போது நாம் பயன்படுத்தும் ரப்பர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் காகிதத்தில் பென்சில் அல்லது மரக்கரியால் எழுதியதை அழிக்க மெழுகு போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தினார்கள். பர்ச்மெண்ட், பாப்பிரஸ் தாள்களில் இங்க் பேனாவால் எழுதியதை மணல்கற்கள், பியூமிஸ் போன்ற மாவுக்கற்களை வைத்துத் தேய்த்து அழித்தார்கள்.
பிரெட் துண்டுகளைக்கூட ரப்பராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரெட் துண்டுகள்தான் ரப்பர் என்பதால், டோக்கியோவில் இருந்த பள்ளிகளில் மாணவர்கள் எவ்வளவு கேட்டாலும் தருவார்களாம். பசிக்கும்போது அதில் கொஞ்சம் பிரெட்டைச் சாப்பிட்டுவிடுவார்களாம். ரப்பரால் செய்யப்பட்ட எரேசர்ஸ் கண்டுபிடிக்கும்வரை பிரெட்தான் மிகச் சிறந்த எரேசராக இருந்தது.
1770-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ப்ரீஸ்ட்லி என்கிற வேதியியல் மற்றும் தத்துவ அறிஞர், தான் எழுதிய Familiar Introduction to the Theory and Practice of Persperctive என்கிற புத்தகத்தில் ரப்பரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். “பென்சிலால் எழுதியதை அழிக்க உதவும் வகையில் நைர்ன் என்னும் கணிதப் பொருட்கள் வடிவமைப்பாளர் ஒரு சிறிய ரப்பர் துண்டை விற்பனை செய்கிறார். இரண்டு இஞ்ச் அளவுள்ள இது, பல வருடங்கள் உழைக்கும்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
1839-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் குட்இயர் என்பவர், ரப்பரை இலகுவாக்கும் ‘வல்கனைசிங்’ முறையை அறிமுகப்படுத்தினார். 1858-ம் ஆண்டு பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் என்பவர், பென்சிலின் ஒரு முனையில் ரப்பரைச் சேர்த்து ஒட்டும் முறையை அறிமுகப்படுத்தினார். பிறகு 1860களில் ‘ஃபேபர் காஸெல்’ நிறுவனம், பென்சிலுடன் ரப்பரை பசை மூலம் ஒட்டாமல் பென்சில் முனையில் அவை இணைந்திருப்பது போல தயாரித்தது. ‘பென்னி பென்சில்’ என்று அழைக்கப்பட்ட இந்த மாதிரி பென்சிலைப் பிறகு பல நிறுவனங்கள் தயாரித்தன.
எரேசருக்குப் பின்னால் எவ்வளவு கதை இருக்கிறது பாருங்கள். இனி எழுதும்போது கவனமாக எழுதி, எரேசரோட வேலையைக் குறைப்பீர்கள் அல்லவா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago