கடையில பலூன் பொம்மை வாங்கிருக்கீங்களா? திருவிழா சமயத்துல குச்சி குச்சியா கை, கால் வச்சு, முட்டைக்கோஸ் மாதிரி தலை வச்சு, கம்பு கட்டி விற்க கொண்டு வருவாங்க. ‘அத வாங்கித்தா’ன்னு அப்பா, அம்மாகிட்ட அடம் பிடிச்சு வாங்கியிருப்பீங்க.
ஆனால், வாங்கி வீட்டுக்கு வரதுக்குள்ள ‘டொப்’ன்னு உடைஞ்சு போயிடும் அந்த பலூன் பொம்மை. நீங்களும் வேற வாங்கித் தரச் சொல்லி அழுதிருப்பீங்க. அந்த மாதிரியான பலூன் பொம்மை, ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போல சும்மா பறந்து பறந்து எதிராளிகளைப் பந்தாடுனா எப்படியிருக்கும்? சும்மா மின்னல் மாதிரி சரட்டு சரட்டுன்னு வந்து அடி கொடுத்தா எப்படியிருக்கும்? அந்த மாதிரி ஒரு பலூன் ஹீரோதான் பேமேக்ஸ்.
குட்டி ஹெமாடாவின் சுட்டி ரோபோ
ஒரு குட்டிப் பையன் ஹீரா ஹெமாடா. அவன் உங்கள மாதிரி பயங்கர சுட்டி. அடிக்கடி ரோபோ சண்டைப் போட்டியில கலந்துக்கிட்டு சேட்டை பண்ணிக்கிட்டு வருவான். அப்படி அவன் சேட்டை பண்ணி மாட்டிக்கும்போதெல்லாம் அவனோட அண்ணன் டடாசிதான் காப்பாத்தி வீட்டுக்குக் கூப்பிட்டு வருவான். இவுங்க ரெண்டு பேரும் அம்மா இல்லாத பிள்ளைகள். அவுங்க அத்தைதான் அம்மா மாதிரி ரெண்டு பேரையும் கவனிச்சிக்கிறாங்க. இப்படி இருக்குற அவுங்க வாழ்க்கைகுள்ள நம்ம பலூன் ஹீரோ எப்ப வரான் தெரியுமா?
குட்டிப் பையன் ஹெமாடாவோட அண்ணன் டடாசி ரோபா செய்யுற படிப்பு படிக்கிறவன். அவன் ஒரு டாக்டர் ரோபோ கண்டுபிடிக்கிறான். அது நமக்கு லேசா உடம்பு சரியில்லைனாலோ, லேசா காயம்பட்டுக் கத்தினாலோ உடனே அதோட பெட்டிக்குள்ள இருந்து வந்து காயத்தைச் சரிபண்ணும். அதோட பெயர்தான் பேமேக்ஸ். அதான் நம்ம பலூன் ஹீரோ. டடாசி பலூன் ஹீரோவ ஹெமாடாவுக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறான். இதுக்கிடையில ஒரு பெரிய ரோபோ போட்டி நடக்குது.
அதுல ஹெமாடா கண்டுபிடிச்ச மைக்ரோபாட் ரோபோவோட கலந்துக்கிறான். அவனோட ரோபோவுக்கு நிறைய பாராட்டு கிடைக்குது. போட்டி முடிஞ்சு காலேஜ்க்கு வெளியில நின்னு அண்ணனும் தம்பியும் சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு தீ விபத்து நடக்குது. அவனோட ஆசிரியரைக் காப்பாற்ற போய் டடாசி தீயில மாட்டிகிட்டு இறந்து போயிடுறான்.
ஹீரோவான ஜீரோ
சின்ன வயசுல இருந்து ஒண்ணாவே வளர்ந்த அண்ணன் இறந்துபோனதால ஹெமாடாவால தாங்கிக்க முடியல. அழுது எதுவும் சாப்பிடாம இருக்கான். அவுங்க அத்தை சொல்லியும் கேக்காம ரூமுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறான். அப்படி இருக்கும்போது அவனோட குட்டி ரோபோ ஒண்ணு ஹெமாடாவோட கால்ல விழுந்து அவனுக்கு லேசா அடிபட்டுடுது.
உடனே அவன் அண்ணன் கண்டுபிடிச்சா பலூன் ஹீரோ பேமேக்ஸ் எந்திரிச்சு வந்து காயம் பத்திக் கேக்குது. ஆனால் ஹெமாடா ஒண்ணும் இல்லைன்னு சமாளிக்கிறான். ஆனால் பலூன் ஹீரோ நம்ம அம்மா மாதிரி ரொம்ப ரொம்ப கண்டிப்பானது. விடாம அவன் காயத்தைச் சரி பண்ணுது. அப்படியே பலூன் ஹீரோவும் ஹெமாடாவும் ப்ரெண்ட்ஸ் ஆயிடுறாங்க.
ஒரு நாள் தீ விபத்து நடந்த காலேஜ்க்குப் போயி பலூன் ஹீரோவும் ஹெமாடாவும் பாக்குறாங்க. தன்னோட அண்ணன் தானா சாகலை யாரோ கொன்னுருக்காங்கன்னு ஹெமாடாவுக்குத் தெரிய வருது. அண்ணனைக் கொன்னவுங்கள பழி வாங்க நினைக்கிறான் ஹெமாடா. ஆனால், அவனுக்கு இருக்கிற ப்ரெண்ட் பலூன் ஹீரோ ஊசில குத்துனாலே புஸ்னு போயிடும் இல்லையா?
அதனால தன்னோட ரோபோ மைண்ட வச்சு பலூன் ஹீரோவுக்கு ராஜா மாதிரி கவசம் செஞ்சு போடுறான் ஹெமாடா. அதுக்குப் பவர் ஏத்துறான். கூடுதலா சூப்பர் மேன் மாதிரி பறக்கிற பவரையும் கொடுக்கிறான். இந்த பவர் எல்லாம் வச்சுக்கிட்டு பலூன் ஹீரோ, எதிராளிகளைப் பந்தாடி பாஸ் ஆனாங்களா, இல்ல ஃபெயில் ஆனாங்களா? அதைப் படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்குங்க.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago