மனுஷங்களுக்குப் பலவிதமான உணர்ச்சிகள் (Feeling) உண்டு. உணர்ச்சின்னா என்னனு கேட்குறீங்களா? சந்தோஷமா சிரிக்கிறது, சோகமா அழுறது. அப்புறம் கோபமா சண்டை போடுறது. இதுமாதிரி உணர்ச்சியெல்லாம் நீங்களும் வெளிப்படுத்தியிருப்பீங்க. ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து விளையாடிச் சிரிச்சுருப்பீங்க. அம்மா, அப்பா உங்களைக் கண்டிக்கும் போது அழுதிருப்பீங்க. அப்புறம் ஃப்ரண்ட்ஸ் கூட, அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சிப் பாப்பா கூட கோபமா சண்டை போட்டிருப்பீங்க. இதெல்லாம் தினசரி நடக்குறது.
இது இல்லாம பொறாமை (Jealous) அப்படினு ஒரு உணர்ச்சி இருக்கு. இந்த உணர்ச்சிய நீங்க எப்போவாது வெளிப்படுத்தியிருப்பீங்க. அதாவது உதாரணமா உங்க வீட்டுக்கு அத்தை, மாமாவோட பசங்க லீவுக்கு வரும்போது அவுங்கள உங்க அம்மா, அப்பா தூக்கிக் கொஞ்சுறது உங்களுக்குப் பிடிக்காம போகலாம். அப்போ உங்க அப்பா, அம்மா மேல உங்களுக்குப் பயங்கறமா கோபம் வரும். இதைதான் பொறாமைன்னு சொல்றாங்க.
உங்க ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் மேல கூட இந்தப் பொறாமை வரும். ஆனால் இந்தப் பொறாமை நல்லது கிடையாது. ‘நாம எல்லா நேரமும் அப்பா, அம்மாகூட இருக்கோம் அத்தை, மாமா பசங்க எப்போதாவதுதானே வாராங்க. அதனால அவுங்க இருந்துட்டுப் போகட்டும்’னு உங்களுக்குத் தாராள எண்ணம் வந்துச்சுன்னா, இந்தப் பொறாமையே இருக்காது.
ஜாலியான பூனைக் குட்டி
Garfield படத்துல ஒரு குட்டிப் பூனைக்கு இந்த மாதிரிப் பொறாமை உணர்ச்சி வருது. அந்தப் பொல்லாத பொறாமை உணர்ச்சியால் என்னென்ன மாதிரி கெட்டதெல்லாம் நடக்குதுன்னு இந்தப் படத்துல சொல்றாங்க. ஜான்னு ஒருத்தர். அவரோட செல்லப் பூனையோட பெயர்தான் கார்பீல்டு. இந்தப் பூனை பயங்கரச் சுட்டி. உங்க அப்பா, அம்மா உங்கள எவ்ளோ செல்லமா வளக்குறாங்களோ அதவிடச் செல்லமா ஜான், கார்பீல்டை வளர்த்து வந்தார். அதுக்குன்னு ஒரு குட்டி கட்டில். காலை எழுந்ததும் நீங்க எல்லாம் சாப்பிடுற மாதிரி ஜானும் கார்பீல்டுக்கு பூனைங்க சாப்பிடுற கெளாக்ஸ் செஞ்சு கொடுப்பார்.
கார்பீல்டு அத நல்லா சாப்பிட்டுட்டு வெளியே போய் அதோட பூனை ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரே விளையாட்டு. பக்கத்து வீட்டுக்குப் போய் பாலைத் திருடிக் குடிக்கும். இது மட்டுமில்லாம பக்கத்து வீட்டுல உள்ள நாய்கிட்ட சேட்டை பண்ணும். அந்த நாய் செயின்ல கட்டியிருக்கிறதால கார்பீல்ட எதுவும் பண்ண முடியாது.
நைட்ல ஜான் வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் சாப்பாடு கொடுப்பார். அத சாப்டுட்டு கார்பீல்டு ஹாயா சேர்ல உக்கார்ந்து டிவி பார்க்கும். இப்படி கார்பீல்டு பூனைக் குட்டியோட வாழ்க்கை ஜாலியா போய்க்கிட்டு இருந்துச்சு.
பொறாமை கூடாது
ஒரு நாள் ஜான் அவரோட கேர்ள் ஃப்ரண்ட் கொடுத்ததுன்னு ஒரு நாயை வீட்டுக்குக் கொண்டு வந்துறார். அந்தக் குட்டி நாயோட பெயர் ஒடி. அது கார்பீல்டு மாதிரி சுட்டியான குட்டி கிடையாது. ரொம்ப பொறுப்பா இருக்கும். காலைல எழுந்ததும் ஓடிப் போய் வெளில கிடக்கும் நியூஸ் பேப்பரை எடுத்து வந்து ஜான் கிட்ட கொடுக்கும். வெளியில சுத்தமா ஒழுங்கா இருக்கும். அதனால் ஜானுக்கு ஒடிய ரொம்பப் பிடிச்சு போச்சு. இதனால கார்பீல்டுக்கு அது மேல பொறாமை வந்துச்சு.
ஜான், ஒடிய கூட்டிட்டு வெளில போயிருந்தப்ப, கார்பீல்டு கோபத்துல ஒரு பந்தை உதைக்க, வீட்ல உள்ள பொருட்கள் எல்லாம் விழுந்து உடைஞ்சிருது. ஜான் கோபத்துல கார்பீல்ட வெளில தள்ளி கதவைப் பூட்டிடுறார். கார்பீல்டு வெளிலேயே நைட்டெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கும்.
கார்பீல்டு பூனையை ஜான் வீட்டில் சேர்த்தாரா? கார்பீல்டு பூனை பொறாமை உணர்ச்சியை விட்டுட்டு திருந்தியதா? அதை தெரிஞ்சுக்க Garfield படம் பாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago