பூமியோட துணைக்கோள் எது? ‘நிலா’என்று பள்ளிக்கூடத்துல உங்க டீச்சர் சொல்லிக் கொடுத்திருப்பாங்க. ஆனால், பூமியைச் சுற்றித் தற்காலிகமாக நிலாக்கள் சுற்றி வருவது பற்றி தெரியுமா? கடந்த 2 வருஷத்துக்கு முன்னால இப்படி ஒரு தற்காலிக நிலா, உலா வந்து சென்றதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சி சொல்லியிருக்காங்க.
இந்தத் தற்காலிக நிலா 2006-ம் ஆண்டு முதல் 2007 வரை பூமியைச் சுற்றி வந்திருக்கு. இது சுமார் 5 மீட்டர் விட்டத்துல இருந்துச்சாம். பூமியோட சுற்றுப்பாதையில இப்படி ஒரு விண்கல் (குறுங்கோள்) சுற்றிவருவதைப் பார்த்த விஞ்ஞானிகள், ராக்கெட் அல்லது செயற்கைக்கோளின் சிதைந்த பாகம்னு நினைச்சிருக்காங்க.
அதை விஞ்ஞானிகள் தெளிவாக ஆராய்ந்தாங்க. அது ஒரு தற்காலிக நிலான்னு கண்டுபிடிச்சுச் சொன்னது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்ன்பெல் பல்கலைக்கழகம்.
அது சரி, இது பூமியின் சுற்றுப்பாதைக்கு எப்படி வந்திருக்கும்? அதுக்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசைன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. ஈர்ப்பு விசையால தற்காலிகமாக ஈர்க்கப்பட்டு, பூமியோட சுற்றுப்பாதைக்குள் வந்த அந்த விண்கல், இரண்டு ஆண்டுகள் சுற்றிவிட்டுப் போய்விட்டதாம்.
1846-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரைக்கும் நூற்றுக்கணக்கான தற்காலிக நிலாக்கள் பூமியை உலா வந்ததும் போவதுமாக இருந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
அடுத்த தற்காலிக நிலா எப்போ வரும்னு தெரியலை, வந்தா நிச்சயமா நாமளும் பார்த்துடுவோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago