மின்னல் வேக துப்பாக்கி வீரன்

By கிங் விஸ்வா

நம்முடைய நிழலைவிட வேகமாக நம்மால் எதையாவது செய்ய முடியுமா? முயன்று பாருங்களேன்! நாம் எதைச் செய்தாலும் நம் நிழலும் அதையே கொஞ்சம் தாமதமாகச் செய்யும்.

ஆனால், தன் நிழலைவிட வேகமாக செயல்படக்கூடிய திறமை கொண்டவர் ஒருவர் இருக்கிறார். அந்த அதிசய மனிதர் எங்கே இருக்கிறார்? அவர்தான் லக்கிலூக் என்ற குதிரைவீரன். அதாவது லக்கிலூக் உறையிலிருந்து தன் துப்பாக்கியை எடுத்து எதிரியைச் சுட்டுவிட்டு மறுபடியும் துப்பாக்கியை உறையில் வைக்கும்போதுதான், அவரது நிழலானது துப்பக்கியை உறையில் இருந்தே எடுக்கும். வேகம் என்றால், அப்படியொரு வேகம், சும்மா மின்னல் மாதிரி.

அமெரிக்காவில் இருக்கும் நத்திங் கல்ச் என்ற ஊரில்தான் லக்கிலூக் வழக்கமாக தங்கி இருப்பார். கதையின் ஆரம்பத்தில் அவருக்கு அவசர செய்தியைச் சொல்லும் தந்தி ஏதாவது வரும். உடனே அவர் புறப்பட்டுச் செல்வார். அல்லது ஆபத்தில் இருக்கும் யாருக்காவது உதவி செய்ய பயணம் மேற்கொள்வார்.

அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமானவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டுதான் பெரும்பாலான லக்கிலூக் கதைகள் எழுதப்படுகின்றன. வெல்ஸ் ஃபார்கோ கோச்சு வண்டிகள் முதல் குதிரைகளை கொண்டு தபால் பட்டுவாடா செய்த போனி எக்ஸ்பிரஸ்வரை, தந்தி கம்பங்களை அமைப்பது முதல் ரயில் பாதையை உருவாக்குவதுவரை அமெரிக்க வரலாற்றின் முக்கியக் கட்டங்களை லக்கிலூக் கதைகள் மூலமாகவே படிக்கலாம்.

குதிரை: ஜாலி ஜம்பர். அமெரிக்காவிலேயே புத்திசாலியான குதிரையான இது பேசும், செஸ் விளையாடும், தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்ளும், லக்கியைச் சங்கடங்களில் இருந்து காக்கும். ஜாலி ஜம்பரின் கமெண்ட்டுகள் சிரிப்பை வரவழைக்கும்.

நாய்: ரன் டன் ப்ளான். டால்டன் சகோதரர்களைப் பாதுகாக்க சிறையில் வளர்க்கப்படும் இதுதான் அமெரிக்காவிலேயே மக்கான நாய். அமெரிக்காவில் பிரபலமான ரின் டின்-டின் என்ற நாயைக் கேலி செய்யும் வகையில் இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

நண்பர்கள்: கலாமிடி ஜேன். அமெரிக்க வரலாற்றில் நிரந்தர இடம்பிடித்துள்ள அதிரடி ஜேன், பல கதைகளில் லக்கிலூக்குக்கு துணையாக சாகசம் புரிந்துள்ளார். தைரியமான பெண்ணான இவர், மற்றவர்களைத் திட்டுவது கேட்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும்.

எதிரிகள்: டால்டன் சகோதரர்கள் உண்மையான கதாபாத்திரங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ஜோ, வில்லியம், ஜாக் & ஆவரேல் ஆகியோர்தான் டால்டன் சகோதரர்கள். இவர்களின் உயரமும், புத்திசாலித்தனமும் எதிர்மறையாக தொடர்புள்ளவை. உயரமான ஆவரேல்தான் இருப்பதிலேயே மக்கு. குள்ளமான ஜோதான் இவர்களில் ஓரளவுக்குப் புத்திசாலி. இவர்களைச் சிறையில் அடைத்த லக்கிலூக்கைப் பழிவாங்குவதே இவர்களுடைய லட்சியம்.

பொடியன் பில்லி: சிறுவயதிலேயே கண்டிப்புடன் வளர்க்காததால் போகிரியான பில்லி, ஒரு அடங்காப்பிடாரி. வேகமாகத் துப்பாக்கியை கையாளத் தெரிந்த இவனை(யும்) சிறையில் அடைத்தது லக்கியே.

தமிழில் லக்கிலூக்: 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் லயன் காமிக்சின் சகோதர வெளியீடான ஜூனியர் லயன்காமிக்சின் சூப்பர் சர்க்கஸ் இதழில் தமிழ் பேச ஆரம்பித்த லக்கி, இன்று வரையிலும் தமிழக மக்களின் பிரியமான காமெடி குதிரை வீரராக இருக்கிறார். லயன் காமிக்ஸ் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட இவரது கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளது.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் தொடராகவும் லக்கி சாகசம் புரிந்தார். 1983, 1991, 2001 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் லக்கிதொடர் ஒளிபரப்பானது. இவை தமிழிலும் சுட்டி டிவியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

லக்கிலூக் இன்று:

1. ஐரோப்பாவில் பல விளம்பரங்களில் தோன்றும் லக்கிலூக், 1984 முதல் இன்றுவரையில் பலவகை வீடியோ கேம்கள் மூலம் குழந்தைகளை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார்.

2. ஓவியர் அக்டேவின் கைவண்ணத்தில், வருடத்திற்கு ஒரு கதை என்ற வகையில் லக்கிலூக் கதைகள் இப்போதும் வெளியாகின்றன.

3. ஒவ்வொரு வருடமும் இவரது புதிய கதை வெளியாகும் அன்று லக்கி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி, புதிய புத்தகத்தில் ஓவியரிடம் கையொப்பம் பெற்றுச் செல்கின்றனர்.

4. உலகின் 23 மொழிகளில் அச்சாகும் லக்கிலூக் குழந்தைகளைக் கவர, லக்கியின் சிறுவயது சாகசங்களைக் கொண்ட கிட் லக்கி (சுட்டி லக்கி) கதைவரிசை பெரும் வெற்றி பெற்றுள்ளது.

உருவாக்கியவர்: மோரிஸ் (ஓவியர்)

முதலில் தோன்றிய தேதி: 07-12-1946 (ஸ்பிரோ வார இதழ், பிரான்ஸ்)

பெயர்: லக்கி லூக்

வேறு பெயர்கள்: கிட் லக்கி (சுட்டி லக்கி), மிஸ்டர் லூக்

தொழில்: சட்டத்தின் பாதுகாவலர்

விசேஷ சக்தி: தன் நிழலைவிட வேகமாகச் சுடுபவர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்