20 முதல் 30 குழந்தைகள்வரை இந்த விளையாட்டை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?சமதளமான இடத்தில் சற்று இடைவெளி விட்டு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள்.
இனி, விளையாடலாமா?யாராவது ஒருவர் ‘ஒன்று’ என்று சொல்லி விளையாட்டைத் தொடங்குங்கள். அப்படிச் சொல்லும்போதே, வலது கையால் இடது கையின் மீதோ அல்லது இடது கையால் வலது கையின் மீதோ லேசாகத் தட்டியபடிச் சொல்லுங்கள்.
அவ்வாறு தட்டும்போது, தட்டுபவருக்கு அருகில் இருபுறமும் உட்கார்ந்திருப்பவர்கள் கவனமாக இருங்கள்.
இடப்புறம் தட்டினால் இடது பக்கத்தில் இருப்பவர், வலப்புறம் தட்டினால் வலது பக்கத்தில் இருப்பவர் விளையாட்டைத் தொடருங்கள்.
அடுத்து, விளையாட்டைத் தொடர்பவர் அதேபோல், ‘இரண்டு…’ என்று சொல்லிவிட்டு, அவர் விருப்பம்போல் ஏதாவது ஒரு கையால் மற்றொரு கையில் தட்டுங்கள்.
அவர் எந்தப் பக்கம் தட்டினாரோ அந்தப் பக்கத்தில் இருப்பவர் ‘மூன்று’ என்று சொல்லி, அவர் விருப்பம்போல, எந்தப் பக்கமாவது கையைத் தட்டுங்கள்.
அடுத்தவர், ‘நான்கு…’ என்று கையைத் தட்ட, அதற்குப் பக்கத்திலிருப்பவர் ‘ஐந்து’ என்று கையைத் தட்ட, அதற்கு அடுத்தவர் ‘ஆறு’ என்று சொல்லி கையைத் தட்டுங்கள்.
‘ஆறு…’ என்று சொல்லி கையைத் தட்டியவர் எந்தப் பக்கம் தட்டினாரோ, அந்தப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் உடனே, கையை எடுத்து தலை மேல் வைத்து, ‘செவன் அப்’ என்று சொல்லுங்கள்.
வலது கையைத் தலையில் வைத்து இடதுபக்கம் காட்டியபடி சொன்னால் இடதுபக்கம் அமர்ந்திருப்பவர் அல்லது இடது கையைத் தலையில் வைத்து வலதுபக்கம் காட்டிச் சொன்னால் வலதுபக்கம் அமர்ந்திருப்பவர் ‘ஒன்று’ என்று சொல்லி, விளையாட்டை மீண்டும் தொடர்ந்து ஆடலாம்.
அடுத்தடுத்து வேகமாகச் சொல்லியபடி விளையாடும் இந்த விளையாட்டில், யாராவது அவசரப்பட்டு இடதுபக்கம் இருப்பவர் சொல்வதற்குப் பதிலாக வலதுபக்கம் இருப்பவர் சொல்லிவிட்டால் அவர் ‘அவுட்’ ஆவார்.
‘ஆறு’ என்று அருகில் இருப்பவர் சொல்லிய பிறகு, ‘செவன் அப்’ என்று தலையில் கை வைக்காமல் சொன்னால், அவரும் ‘அவுட்’ ஆவார்.
இப்படியாக, ஒவ்வொருவராகப் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, கடைசிவரை தொடர்ந்து விளையாடிவரும் இருவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள்.
(இன்னும் விளையாடலாம் )
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago