தினுசு தினுசா விளையாட்டு: குரங்குப் பந்தாட்டம்!

By மு.முருகேஷ்

குழந்தைகளையும் விளையாட்டுகளையும் எப்போதுமே பிரிக்கவே முடியாது. சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகள் குழந்தைகள் மனதில் என்றும் பசுமையாய் ஞாபகத்தில் இருக்கும். பள்ளியில் மட்டுமல்லாமல், விளையாடுகிற இடத்திலும் தினந்தோறும் புதிய புதிய நண்பர்கள் குழந்தைகளுக்குக் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகள் எந்த ஊருக்குப் போனாலும், அங்கும் அவர்களோடு விளையாட நண்பர்கள் கிடைத்துவிடுவார்கள். நண்பர்கள் எவ்வித பாகுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளோடும் சேர்ந்து விளையாடுவார்கள். இன்றோ இட நெருக்கடி, படிப்புக்கு முக்கியத்துவம் போன்ற காரணங்களால் முன்புபோல் குழந்தைகளால் விளையாட முடிவதில்லை. பெற்றோரும் விளையாட விடுவதில்லை.

ஆனாலும், கிடைக்கிற குறைந்த நேரத்தில் ஏதாவது சந்துபொந்துக்குள் குழந்தைகள் இன்னமும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தைகள் விளையாடுவதற்கான நேரமும் சரியான சூழலும் நண்பர்களும் அமைந்துவிட்டால், குழந்தைகள் படுகொண்டாட்டமாகிவிடுவார்கள்.

சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயர் ‘குரங்குப் பந்தாட்டம்’.

என்ன பார்க்கிறீர்கள்? இதுதான் விளையாட்டின் பெயரே. எல்லா வயதுக் குழந்தைகளும் இந்த விளையாட்டை விளையாடலாம். எண்ணிக்கை ஏதுமில்லை. எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.

இந்த விளையாட்டிலும் முதல் போட்டியாளராக ஒருவர் இருக்க வேண்டும். விளையாடுவதற்கு முன்பாகவே, முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நன்கு தெரிந்த ‘சாட் பூ திரி’, ‘உத்திப் பிரித்தல்’அல்லது ‘பூவா… தலையா…’ ஆகிய வழி முறைகளில், ஏதேனும் ஒன்றின் வழியாக முதல் போட்டியாளரைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

பிறகு, முதல் போட்டியாளரை நடுவில் நிற்க வையுங்கள். பங்கேற்கும் அனைவரும் அவரைச் சுற்றி பெரிய வட்டமாக நின்றுகொள்ளுங்கள்.

சுற்றி நிற்பவர்களில் யாராவது ஒருவரின் கையில் சற்றே பெரிய பந்து ஒன்று இருக்க வேண்டும். தன் கையில் இருக்கும் பந்தை நின்ற இடத்திலிருந்தே, வட்டத்தில் உங்களுக்கு எதிரில் நிற்பவரைப் பார்த்து மேலே தூக்கி வீசுங்கள். அப்படி வீசும்போது, அந்தப் பந்தை நடுவில் உள்ள முதல் போட்டியாளர் பிடித்துவிட்டாலோ அல்லது தொட்டுவிட்டாலோகூட பந்தை வீசியவர் ‘அவுட்’. பிறகு, ‘அவுட்’ஆனவர் இடத்தில் முதல் போட்டியாளர் நின்றுகொள்ள வேண்டும். ‘அவுட்’டானவர் முதல் போட்டியாளராக மாறி, நடுவில் நிறுத்துங்கள். இப்படியாகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த விளையாட்டை அதிக எண்ணிக் கையிலான (இருபதுக்கும் மேற்பட்ட) குழந்தைகள் விளையாடும்போது, நடுவில் நிற்கும் போட்டியாளர் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம். ஒருவர் நிற்பதற்குப் பதிலாக, இருவர் அல்லது மூவர் வட்டத்தின் நடுவில் நின்று, குறுக்கே வீசப்படும் பந்தைப் பிடிக்க முயற்சிக்கலாம்.

போட்டியாளர் பந்தைத் தொட்டாலோ அல்லது பிடித்தாலோ, அப்போது யார் பந்தை வீசினாரோ, அவரே அடுத்தப் போட்டியாளராக விளையாட்டைத் தொடர வேண்டும்.

ஒவ்வொருமுறை பந்தைக் குறுக்கில் வீசும்போதும், அதை நடுவிலுள்ள போட்டியாளர் பிடிப்பதற்கு முயற்சிக்கும்போதும் உற்சாகமாக குரல்கள் எழுப்ப, அந்த இடத்தைச் சுற்றிலும் எதிரொலிக்கும்.

என்ன, குரங்குப் பந்தாட்டம் விளையாடத் தயாரா?

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்