வால் போய் கால் முளைக்கும்

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிர்கள் இரு வாழ்விகள். செதில்கள் மற்றும் வாலோடு இரு வாழ்விகள் பிறக்கின்றன. வளரும்போது நுரையீரலும் கால்களும் நிலத்திலும் வாழ்வதற் கேற்ப வளர்ந்துவிடும். இரு வாழ்விகள் குளிர் ரத்தப் பிராணிகள். தண்ணீரிலும், நிலத்திலும் ஒரே வெப்பநிலையைக் கொண்டவை.

எத்தனை வகைகள்?

உலகெங்கும் 4 ஆயிரம் இருவாழ்விகள் உள்ளன. தவளைகள், செவிட்டுப்பாம்புகள், தேரைகள் ஆகியவை இருவாழ்விகள்.

எப்படி வளர்கின்றன?

பெரும்பாலான இருவாழ்விகள் முட்டை இடுபவை. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், புழு போல இருக்கும். தவளை பிறக்கும்போது ஒரு மீன்வடிவில் தலைப்பிரட்டையாக இருக்கும். வளரும் போது, அவற்றின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தவளையின் நிலைகள்

• வால் மற்றும் செதில்களுடன் தவளை தலைப் பிரட்டையாக இருக்கும்

• இரண்டு கால்கள் முளைக்கின்றன

• நான்கு கால்கள் மற்றும் நீளமான வால் உருவாகும்

• பிறகு வால் சிறிதாகிறது

• வால் மறைந்து வளர்ந்த தவளையாகிறது.

எங்கே வாழ்கின்றன?

நீர்ப்பகுதிகள், வனங்கள், குளங்கள், குட்டைகள், மழைக்காடுகள் மற்றும் ஏரிகளில் வாழும்.

என்ன உண்ணும்?

அசைவப் பிராணிகள். சிலந்திகள், வண்டுகள் மற்றும் புழுக்களைச் சாப்பிடக்கூடியவை. தவளை போன்ற இருவாழ்விகளுக்கு நீள நாக்குகள் இருக்கும். நாக்கை நீட்டி அதன் பசையால் இரையைப் பிடித்துச் சாப்பிடும். பெரும்பாலான இருவாழ்விகள் புழுப்பருவத்தில் இருக்கும்போது, தாவரங்களையே சாப்பிடக்கூடியவை.

பெரியது

இருவாழ்விகளிலேயே மிகப்பெரியது சைனீஸ் ஜையண்ட் சாலமண்டர். ஆறடி வரை வளரும். 140 பவுண்டுகள் எடை கொண்டது.

சிறியது

உலகிலேயே சிறிய இருவாழ்வி பீடோப்ரைன் அமௌன் சிஸ் என்று அழைக்கக் கூடிய சிறுதவளை. 0.3 அங்குலம் நீளம் கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE