மனிதர்கள் மனதில் நினைப்பதை நிறைவேற்றும் அதிசய மோதிரம் பற்றிய கற்பனைக் கதைகளைப் படித்திருப்பீர்கள். அதே பாணியில், பெஞ்சமின் டென்னிசன் என்ற 10 வயது சிறுவனுக்கு வனப்பகுதியில் இருந்து கைக்கடிகாரம் போன்ற பொருள் ஒன்று கிடைக்கிறது. பூமிக்கு வெளியே உள்ள வேற்று கிரகம் ஒன்றிலிருந்து கிடைத்த அந்த அதிசயப் பொருளின் பெயர் ‘ஆம்னிட்ரிக்ஸ்’ (Omnitrix). அதை அணிந்துகொண்டால் வெவ்வேறு விதமான உருவங்களை, குறிப்பாக ஏலியன் (Alien) எனப்படும் வேற்று கிரகவாசிகளின் உருவங்களை அடைய முடியும்.
நல்ல எண்ணமும் துணிச்சலும் படைத்த சிறுவர்களுக்கு இதுபோன்ற பொருட்கள் கிடைத்தால் அவர்கள் செய்யும் முக்கியக் காரியம், அப்பாவி மக்களைத் தீயவர்களிடமிருந்து காப்பதுதான். பெஞ்சமினும் அதைத்தான் செய்கிறான். இந்தக் கதையே நீங்கள் பார்த்து ரசிக்கும் பென் - 10 கார்ட்டூன் தொடர்.
கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடரை டங்கன் ரூலா, ஜோ கேஸீ, ஜோ கெல்லி மற்றும் ஸ்டீவன் சீகல் என்ற நால்வர் குழு உருவாக்கியுள்ளது.
தொலைக்காட்சித் தொடராகவும், தொலைக்காட்சித் திரைப்படங்களாகவும் வெளியாகி உலகமெங்கும் உள்ள சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பென் -10’, சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்காக வழங்கப்படும் எம்மி விருதுகளையும் பெற்றுள்ளது.
எதிரிகள் தாக்கவரும்போது பெஞ்சமின் தான் கையில் அணிந்திருக்கும் ஆம்னிட்ரிக்ஸ் வாட்சை ஓங்கித் தட்டினால் சிறிது நேரத்தில் வைல்ட்மட், ஃபோர் ஆர்ம்ஸ், டயமண்ட் ஹெட் போன்ற பல்வேறு ஏலியன் உருவங்களைப் பெற்று விடுவான். ஆற்றல் வாய்ந்த இந்த ஏலியன் எதிரிகளைச் சின்னாபின்னமாக்கிவிடும். இந்தத் தொடரில் வரும் ஏலியன் உருவங்களில் செய்யப்பட்ட பொம்மைகள் உலகமெங்கும் 10 கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago