நீங்களே செய்யலாம் - பயாஸ்கோப்

By செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்

மூடியுடன் கூடிய இரண்டு காலி இங்க் பாட்டில்கள் அல்லது போஸ்டர் கலர் பெயிண்ட் பாட்டில்கள், இந்த பாட்டில்கள் கச்சிதமாகப் பொருந்துகிற அளவுக்கு இரண்டு அட்டைப் பெட்டிகள், கத்தரிக்கோல், பசை, பெயிண்ட், கார்ட்டூன் ஸ்டிக்கர்கள்.

செய்முறை

1. அட்டைப் பெட்டிகளின் மேல் பக்கம் மூடுவதற்காக இருக்கும் பகுதிகளைக் கத்தரிக்கோல் மூலம் வெட்டுங்கள். ஒரு அட்டைப்பெட்டியின் எதிரெதிர் பக்கங்களை ஜன்னல் போல வெட்டுங்கள். அடுத்த அட்டைப் பெட்டியின் ஒரு பக்கத்தை மட்டும் ஜன்னல் போல வெட்டிவிட்டு அதற்கு எதிர்பக்கத்தை அப்படியே விட்டுவிடுங்கள். வெட்ட வேண்டிய பகுதிகள் படத்தில் ஷேட் செய்து காட்டப்பட்டுள்ளன.

2. இரண்டு அட்டைப் பெட்டிகளையும் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணையும்படி ஒட்டுங்கள். வெளிப்பக்கம் பளிச் நிறங்களால் வண்ணம் பூச வேண்டும்.

3. ஒரு பாட்டிலைச் சுற்றிலும் உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் ஸ்டிக்கர்களை ஒட்டவும்.

4. இன்னொரு பாட்டில் முழுக்கத் தண்ணீரால் நிரப்பி, மூடியால் மூடவும்.

5. ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பாட்டிலை, மூன்று பக்கம் மூடியிருக்கும் அட்டைப் பெட்டியினுள் வைக்கவும். தண்ணீர் நிரம்பிய பாட்டிலை இரண்டு பக்கமும் திறந்திருக்கும் பெட்டியினுள் வைக்கவும்.

6. அட்டைப் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு, ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை லேசாகச் சுற்றியபடியே, நீர் நிரம்பிய பாட்டில் வழியாகப் பாருங்கள்.

7. பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள், பெரிதாகத் தெரியும். பாட்டிலினுள் இருக்கும் தண்ணீர், பூதக்கண்ணாடி போலச் செயல்பட்டு, உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்