தினுசு தினுசா விளையாட்டு: தாண்டுவோமா பச்சைக் குதிரை?

By மு.முருகேஷ்

“வெயில்ல விளையாடாதே. வீட்டுக்குள்ளே வா..!”

இந்த அழைப்பை, விளையாடும் எல்லாக் குழந்தைகளும் கேட்டிருப்பார்கள். வெயிலில் விளையாடக் கூடாது என்று வீட்டில் உள்ளவர்கள் பொத்தாம்பொதுவாகச் சொல்கிறார்கள். உண்மையில், வெயிலில் விளையாடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி யாரும் நமக்குச் சொல்வதில்லை.

நேரடியான சூரிய ஒளியில் விளையாடுவதால் இயற்கையான வைட்டமின் டி-யை நம்மால் பெற முடியும். வைட்டமின்-டி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எலும்பின் வளர்ச்சியும் வலுவும் குறைந்துவிடும். நம் உடலின் தோல்பரப்பில், சருமத்தில் சூரிய ஒளி படும்போது வைட்டமின்-டி கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

சரி… இந்த வாரம் நாம் விளையாடப்போற விளையாட்டு, ‘தாண்டுவோமா பச்சை குதிரை!’

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாட்டின் முதல் போட்டியாளரை ‘சாட் பூ திரி’, ‘உத்தி பிரித்தல்’ அல்லது ‘பூவா… தலையா…’ மூலமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுத்த பிறகு விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

# முதல் போட்டியாளர் தனக்கென்று ஒரு பூவின் பெயரையோ, சாப்பாட்டுப் பொருளொன்றின் பெயரையோ வைத்துக்கொள்ளுங்கள் (இந்தப் பெயரை அந்த விளையாட்டில் பங்கேற்காமல் அங்கிருக்கும் யாராவது ஒருவரிடம் ரகசியமாகச் சொல்லிவிட வேண்டும்).

# பிறகு, முதல் போட்டியாளர் குனிந்து நின்றுகொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தரையில் படும்படி ஊன்றிக்கொள்ளுங்கள்.

# இந்த விளையாட்டில் பங்கேற்கும் மற்றவர்கள், ஓடி வந்து குதிரை மாதிரிக் குனிந்து நிற்பவரைத் தாண்ட வேண்டும். அப்படித் தாண்டும்போது அவருக்குப் பிடித்தமான பூவின் பெயரையோ, சாப்பாட்டுப் பொருளொன்றின் பெயரையோ சொல்லித் தாண்ட வேண்டும்.

# அனைவரும் முதல் சுற்று தாண்டி முடிக்கும்வரை, முதல் போட்டியாளர் கைகளைத் தரையில் ஊன்றியிருப்பார். பிறகு, இரண்டாவது சுற்றில் கைகளைத் தனது கால் பாதத்தில் ஊன்றிக்கொண்டு குனிந்திருக்க வேண்டும்.

# மறுபடியும் அனைவரும் ஏதாவது ஒரு பூ அல்லது சாப்பாட்டுப் பொருளின் பெயரைச் சொல்லித் தாண்ட வேண்டும். இவ்வாறு தாண்டும்போது, முதல் போட்டியாளரின் தலை குனிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நிமிர்ந்து இருந்தால் தாண்டுபவர்கள், “தலையை வெட்டி நாய்க்குப் போடு!” என்பார்கள். உடனே அவர் தலையைக் குனிந்துகொள்ள வேண்டும்.

# மூன்றாவது சுற்றில், முதல் போட்டியாளர் கைகளை முட்டிக்கும் கணுக்காலுக்கும் இடையில் பிடித்துக்கொள்ள வேண்டும். நான்காவது சுற்றில் முட்டிக்காலோடு சேர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக உயரம் கூடிக்கொண்டே போகும். தாண்டுபவர்களும் ஏதாவது பூ, சாப்பாடுப் பொருள் பெயரைச் சொல்லிக்கொண்டே தாண்டுவார்கள்.

# விளையாடுபவர்கள் தாண்டும்போது சொல்லும் பூ அல்லது பொருளின் பெயர் போட்டியாளர் ரகசியமாகச் சொல்லி வைத்திருக்கும் பெயராக இருந்துவிட்டால், அதைச் சொன்னவர் ‘அவுட்’.

# இப்போது ஏதாவது ஒரு பொருளின் பெயரை ரகசியமாக சொல்லிவிட்டு, ‘அவுட்’ ஆனவர் குனிந்துகொள்ள, மற்றவர்கள் அவரைத் தாண்ட வேண்டும். இப்படியாகத் தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடலாம்.

குழந்தைகளே எங்கே போகிறீர்கள்? ஓ… ‘பச்சை குதிரை’ தாண்டவா?

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்