நிலா டீச்சர் குடும்பத்தினர் சென்ற கார் மாலையில் ஊட்டியைச் சென்றடைந்தது. ஊசி குத்துவதைப் போன்ற மாலை நேரத்துக் குளிர் ரஞ்சனிக்கும், கவினுக்கும் புதிய அனுபவமாக இருந்தது. கார், அப்பாவின் நண்பரான நெல்சன் வீட்டை அடைந்தது. அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர் ஊர் சுற்றக் கிளம்பினார்கள். குளிருக்குப் பயந்து ரஞ்சனியும், கவினும் ஸ்வெட்டருக்குள் புகுந்து கொண்டனர். சீக்கிரமே இருட்டிவிட அனைவரும் வீடு திரும்பினர்.
நெல்சன் வீட்டில் விருந்து தயாராக இருந்தது. “முட்டை மட்டும் அவித்தால் சாப்பிட வேண்டியதுதான்” என்று கூறினார் நெல்சன். சமையலறைக்குச் சென்று முட்டைகளை வேகப் போட்டுவிட்டு வந்தார். நெல்சன் குடும்பத்தினரும் நிலா டீச்சர் குடும்பத்தினரும் அரட்டையில் மூழ்கினர்.
கவினுக்கு நல்ல பசி. சமையலறையையே பார்த்துக்கொண்டிருந்தான். கவினைக் கவனித்த நெல்சன், சமையலறைக்குச் சென்றார். ‘‘முட்டை இன்னும் வேகவில்லை, சற்று நேரத்தில் வெந்துவிடும்’’ என்று கவினைச் செல்லமாகத் தட்டினார் நெல்சன்.
கவினுக்கு மனதுக்குள் ஒரு சந்தேகம். ‘‘முட்டை ரொம்ப நேரமாக வெந்து கொண்டிருப்பது போல இருக்கிறதே’’ தனக்குள் கேட்டுக்கொண்டான். அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. இது பற்றி அம்மாவின் காதில் கிசுகிசுத்தான். அம்மா புன்னகைத்தாள்.
“ஆமாம் கவின், சற்றுக் கூடுதல் நேரம் ஆகும்தான்” என்றார் நிலா டீச்சர்.
“கவின் என்ன கேட்கிறான்?” என்று கேட்டார் நெல்சன்.
“முட்டை வேக ஏன் நேரம் ஆகிறது என்று கேட்கிறான். மலைப் பகுதியில் அப்படிதான் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார் நிலா டீச்சர்.
நிலா டீச்சர் இப்படிச் சொன்னதும், ரஞ்சனிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. “அம்மா, மலைப் பகுதியில் முட்டை வேக ஏன் நேரமாகிறது?” என்று நச்சரித்தாள் ரஞ்சனி.
“சரி.. சரி சொல்கிறேன்” என்று நிலா டீச்சர் தயாரானார். அதை கேட்க எல்லோரும் ஆர்வம் காட்டினர்.
“கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல காற்று அழுத்தம் அதிகரிக்கும், ஆனால் நீரின் கொதிநிலை குறையும். வழக்கமாகச் சமவெளிப் பகுதியில் 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நீர் கொதிக்கும். ஆனால், 10 ஆயிரம் அடி உயரம் உள்ள மலைப் பகுதியில் 72 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே கொதித்து விடும். மலைப் பகுதியில் குறைந்த வெப்ப நிலையிலேயே நீர் கொதிநிலையை அடைந்து விடுவதால், அந்த நீரில் வேகும் பொருள்களுக்குப் போதிய அளவுக்குச் சூடு கிடைப்பதில்லை. அதனால் தாமதம் ஆகிறது. அதனால்தான் சமவெளியில் உள்ள நமது வீட்டில் முட்டை வேக ஆகும் நேரத்தைவிட இங்கு அதிக நேரம் பிடிக்கிறது” என்றார் நிலா டீச்சர்.
இதைக் கேட்டதும், “மலைப் பகுதியில் எல்லாமே புதுமையாகத்தான் இருக்கிறது” என்றான் கவின்.
“முட்டை வெந்துவிட்டது. எல்லோரும் சாப்பிட வாங்க” என நெல்சன் அப்போது குரல் கொடுத்தார். கவின் சாப்பாட்டு மேசையை நோக்கி ஓடினான்.
கவினுக்கு நல்ல பசி. சமையலறையையே பார்த்துக்கொண்டிருந்தான். கவினைக் கவனித்த நெல்சன், சமையலறைக்குச் சென்றார். ‘‘முட்டை இன்னும் வேகவில்லை, சற்று நேரத்தில் வெந்துவிடும்’’ என்று கவினைச் செல்லமாகத் தட்டினார் நெல்சன்.
கவினுக்கு மனதுக்குள் ஒரு சந்தேகம். ‘‘முட்டை ரொம்ப நேரமாக வெந்து கொண்டிருப்பது போல இருக்கிறதே’’ தனக்குள் கேட்டுக்கொண்டான். அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை. இது பற்றி அம்மாவின் காதில் கிசுகிசுத்தான். அம்மா புன்னகைத்தாள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago