வாண்டு: ஹாய் பாண்டு குட்மார்னிங்.
பாண்டு: குட்மார்னிங். என்ன வாண்டு, காலையிலேயே வீட்டுக்கு வந்துட்ட? ஸ்கூலுக்குக் கிளம்பலையா?
வாண்டு: கிளம்பணும். அதுக்கு முன்னால ஒரு சந்தேகத்தைத் தீர்க்கலாம்னு உன்னைப் பார்க்க வந்தேன்.
பாண்டு: அப்படி என்ன சந்தேகம்?
வாண்டு: புலியைப் பத்தி டீச்சர் நேத்து பாடம் நடத்திக்கிட்டு இருந்தாங்க. அப்போ, உலகத்துல புலிகளோட எண்ணிக்கை அதிகமாயிருக்குன்னு செய்தி வந்ததா சொன்னாங்க. அந்தச் செய்தியைப் படிச்சுட்டு வாங்க, அதுலேர்ந்து கேள்வி கேட்பேன்னு சொன்னாங்க. நீதான் எப்பவும் நியூஸ் பேப்பர் படிச்சுடுவியே. அதான் அந்தச் செய்தி பத்திக் கேட்கலாம்னு வந்தேன்.
பாண்டு: உனக்கு எப்பவும் புத்தகம், பாடம் படிக்குறதுலதான் விருப்பம் இருக்கு. பேப்பரைப் படின்னு சொன்னா கேட்குறியா? இனியாவது தினமும் பேப்பர் படி. நீ சொல்ற செய்தி இப்போ வரலை. அது ஒரு மாசத்துக்கு முன்னால வந்துச்சு. எனக்குப் படிச்சது ஞாபகம் இருக்கு, 1900-ம் ஆண்டுக்கு அப்புறமா முதல் முறையா புலிகளோட எண்ணிக்கை இப்போ கூடியிருக்குன்னு போட்டிருந்தாங்க.
வாண்டு: எவ்ளோ கூடியிருக்கு. இதைச் சொன்னது யாரு? அதையெல்லாம் சொல்லுப்பா.
பாண்டு: சொல்றேன்... முழுசா கேளு. உலக இயற்கை நிதியம்னு (WWF) ஒரு குழு உலக அளவுல இருக்குப்பா. அவுங்கதான் இதைப் பத்திச் சொல்லியிருக்காங்க. காடுகளை அழிச்சது, புலிகளை வேட்டையாடியதுன்னு 100 வருஷமா புலிகளோட எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கு. கடைசியா 2010-ல் உலகத்துல 3,200 புலிகள்தான் இருந்துச்சாம். இப்போ அதோட எண்ணிக்கை 3,890 அளவுக்கு உயர்ந்திடுச்சாம். அதாவது ரஷ்யாவிலிருந்து வியட்நாம்வரை பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் இந்தப் புலிகள் இருக்காம். இதுல இந்தியாவுல மட்டும் 2,226 புலிகள் இருக்காம்.
வாண்டு: அப்போ இந்தியாவுலதான் புலிகள் நிறைய இருக்கா?
பாண்டு: ஆமாப்பா. உலகில் உள்ள புலிகளோட எண்ணிக்கையில மூன்றில் இரண்டு பங்கு புலிகள் இந்தியாவுலதான் இருக்கு.
வாண்டு: அது சரி, புலியை எப்படிக் கணக்கெடுக்குறாங்க?
பாண்டு: மக்கள்தொகையைக் கணக்கெடுக்குற மாதிரிதான் விலங்குகளையும் கணக்கெடுப்பாங்க. பொதுவா ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியுற விலங்குகளைக் கணக்கெடுறது நேரடி முறை. புலியைப் பொறுத்தவரை மறைமுகமாத்தான் கணக்கெடுப்பாங்க. இப்போ காடுகளில் கேமராக்களைப் பொருத்திப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்டுபிடிச்சு கணக்கெடுக்குறாங்க.
வாண்டு: இவ்ளோ விஷயத்தைப் படிச்சுருக்கியா? இனி நானும் அன்னன்னைக்கு வர்ற செய்திகளைப் படிச்சுடுறேன். நீ சொன்னதை டீச்சர்கிட்ட சொன்னா என்னை ரொம்பப் பாராட்டுவாங்க. ரொம்ப நன்றி பாண்டு.
பாண்டு: இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி. அப்புறம், ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னால, ஸ்கூல பத்தின செய்தியைச் சொல்றேன். அதையும் கேட்டுட்டுப் போ.
வாண்டு: என்ன ஸ்கூல், எங்க இருக்கு அந்த ஸ்கூலு?
பாண்டு: ஆப்பிரிக்காவுல நைஜீரியான்னு ஒரு நாடு இருக்குல்ல. அந்த நாட்டுல மகோகோன்னு ஒரு இடம் இருக்கு. இந்த இடம் கடல் மட்டத்தைவிட, ரொம்ப தாழ்வான இடம். கொஞ்சம் மழை வந்தாலே வீடுகளை வெள்ளம் சூழ்ந்துடும். அதனால, இங்கு இருக்குற மக்கள், மூங்கில், தட்டியைக் கட்டி அதுலதான் வசிக்குறாங்க.
வாண்டு: ஏதோ ஸ்கூல் பத்தி சொல்றதா சொல்லிட்டு என்னென்னமோ சொல்றீயேப்பா.
பாண்டு: விஷயத்துக்குள்ள இப்போதான் வரப்போறேன். அதுக்குள்ள கேள்வி கேட்டா எப்படி? இந்த ஊர்க்காரங்க காலங்காலமா தண்ணியிலதான வசிச்சு வர்றாங்க. கடல் மட்டமும் இப்போ உயர்ந்துகிட்டு வரதால, ரொம்பத் திண்டாடிட்டு இருக்காங்க. அங்க இருக்குற நம்மள மாதிரி குட்டிப் பசங்க படிக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்தக் கஷ்டத்தைத் தீர்க்குறதுக்காக அந்த ஊருல தண்ணிக்குள்ள சூரிய சக்தி மூலமா இயங்குற மூன்றடுக்குப் பள்ளியை ரெண்டு வருஷத்துக்கு முன்னால கட்டினாங்க. பிளாஸ்டிக் டிரம்களை ஒண்ணா கட்டி அதுக்கு மேல மூன்றடுக்குல மூங்கில், தட்டியைக் கட்டி இந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டுனாங்க. இந்தப் பள்ளிக்கூடம் தண்ணியில மிதந்துகிட்டே இருக்குமாம். இப்படி ஒரு வித்தியாசமான பள்ளிக்கூடத்துலதான் பசங்க படிச்சுகிட்டு வராங்க.
வாண்டு: ரொம்ப பாவமா இருக்கேப்பா. பசங்க எப்படித்தான் தண்ணியிலேயே இருந்துகிட்டு படிக்கிறாங்களோ?
பாண்டு: அது அவுங்களுக்குப் பழகிப்போய்டுச்சு. இந்தப் பள்ளிக்கூடத்துக்கும் இப்போ ஆபத்து வந்துடுச்சு. திடீர்னு வந்த பெரிய வெள்ளத்துல பள்ளிக்கூடம் முழுசா பாதிக்கப்பட்டிருக்கு. பள்ளிக்கூடத்தைச் சரி செய்ய இன்னும் 3 மாசம் ஆகுமாம். அதுவரை படிக்குற பசங்களுக்கு ரொம்ப கஷ்டம்தான். உலகில் மிக மோசமாக இருக்குற பள்ளிக்கூடத்துல இதுவும் ஒண்ணு.
வாண்டு: நாமெல்லாம் இங்கே சொகுசா இருக்குற இடத்துல படிக்கவே ரொம்ப அலுத்துக்கிறோம். மகோகோ பகுதி பசங்க இவ்ளோ கஷ்டப்பட்டுப் படிக்கிறதைப் பார்த்தா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.
பாண்டு: சரி வாண்டு, சீக்கிரமா கிளம்பு, நாம பள்ளிக்கூடம் கிளம்பலாம்.
வாண்டு: சரி, நான் வரேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago