இப்போது மழைக்காலம். இந்தப் பருவக் காலத்தில்தான் வானத்தில் வானவில் அடிக்கடி தோன்றும் இல்லையா? வானவில்லைப் பார்த்தவுடன் உங்களைப் போன்ற குட்டீஸ்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ரசிப்பீர்கள். இந்த வானவில் எப்படித் தோன்றுகிறது? அது ஏன் வில் போல வளைந்து காணப்படுகிறது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வானவில் தோன்றவும், வில் போல வளைந்து தெரியக் காரணம் இருக்கிறது. முதலில் வானவில் எப்படித் தோன்றுகிறது? அதற்கு நீர்த்திவலையும் சூரிய ஒளிக்கதிர்களும்தான் காரணம். அதாவது, நீர்த்திவலைகளில் சூரிய ஒளிக்கதிர்கள், ‘முழு அக எதிரொளிப்பு’ அடைவதால்தான் வானில் அழகிய வானவில் தோன்றுகிறது. கோள வடிவத்தில் நீர்த்திவலைகள் இருக்கும்போது, அதில் அதிக கோணத்தில் உட்புகும் ஒளிக்கதிர் வெளியேறும் முன்பே ‘அக எதிரொளிப்பு’ நிலையை அடைகிறது.
இதன் காரணமாக நீர்த் திவலைக்குள் செல்லும் பல நிறக் கதிர்களின் வேகம் மாறுபடுகிறது. இதனால் அவை வெளியேறும்போது பல நிறங்களாகப் பிரிகின்றன. இவை ‘நிறமாலை’யாகக் காட்சி அளிக்கின்றன. நிற மாலையில் உள்ள பல நிறக் கதிர்கள் நம்மை வெவ்வேறு கோணங்களில் வந்தடைகின்றன. இதனால் நம்மைச் சுற்றி ஒரு கோணத்தில் இருக்கும் நீர்த்திவலைகள் ஒரு நிறமாகவும், அடுத்துள்ள கோணத்தில் இருப்பவை வேறு நிறமாகவும் தெரிகின்றன. இதைத்தான் வானவில் என்று கூறுகிறோம்.
இப்படியாக வானவில் ஒரே கோணத்தில் இருப்பதால்தான் அவை வளைந்தும் வில்லு போலக் காட்சி அளிக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago