ஹாரி பாட்டரோட சாகசங்கள படிக்கிறதுன்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமில்லையா? அவரோட புத்தக வரிசையில இரண்டாவது தமிழ்ப் புத்தகத்தைப் படிச்சீட்டீங்களா? பாதாள அறை ரகசியங்கள் பத்தி இந்தப் புத்தகத்துல கதை வருது. அது என்ன கதைன்னா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?
ஹாக்வாட்ஸ் என்ற ஊர்ல மந்திர தந்திரங்களைச் சொல்லித் தர மாயாஜால ஸ்கூல் இருக்கு. இங்க முதல் வருஷ படிப்பை ஹாரி பாட்டாரு முடிக்கிறாரு. முதல் வருஷ படிப்பை முடிச்சிட்டு ஸ்கூல்ல இருக்குற எல்லாப் பசங்களும் லீவுக்காக அவுங்கவுங்க வீட்டுக்குப் போறாங்க.
ஹாரி, தன்னோட பெரியம்மா வீட்டுக்குப் போறாரு. லீவு முடியற நேரத்துல ‘டாபி’ன்னு ஒரு விநோத பிராணி ஹாரியைப் பாக்குது. ஸ்கூலுக்குப் போகாதேன்னு ஹாரிகிட்ட அது சொல்லுது. அப்படிப் போனா நிறைய ஆபத்து இருக்குன்னும் அது எச்சரிக்குது. ஆனா, ஹாரி அதைக் காதுலேயே போட்டுக்கல. அதையும் மீறி, திரும்பவும் ஸ்கூலுக்குப் போறான்.
திடீர்ன்னு அங்க இருக்குற சில ஸ்கூல பசங்க கல்லா மாறிடுறாங்க. ஹாரியோட பெஸ்ட் ஃப்ரெண்டு ஹெர்மயனியும் ஒருநாள் திடீர்ன்னு கல்லா மாறி போறா. ஸ்கூல்ல இருக்குற எல்லாப் பசங்களும் இதைப் பாத்து நடுங்குறாங்க. அந்த ஸ்கூல்ல ஒரு பாதாள ரூம் இருக்குன்னும், அங்கிருந்து ஒரு ராட்சத விலங்கு வருதுன்னும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்றாங்க. இதுதான் எல்லாத்துக்கும் காரணம்னும் பேசிக்கிறாங்க.
உடனே இதைக் கண்டுபிடிக்க ஹாரி பாட்டரும், அவனோட ஃப்ரெண்ட்ஸூம் முயற்சி பண்றாங்க. அப்போ ஒவ்வொரு ஆபத்தா அவுங்களுக்கு வருது. அந்தப் பாதாள அறையையும், ராட்சத விலங்கையும் ஹாரி பாட்டரு கண்டுபிடிச்சானா, கல்லான ஸ்கூல் பசங்க திரும்பவும் உருவம் மாறினாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசையா? அப்போ, ‘ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்’ புத்தகத்தைப் படிங்க. இங்கிலீஷ் மொழிக்கு இணையா சுவாரசியமாவும், விறுவிறுப்பாவும் தமிழ்ல இந்தப் புத்தகத்தை கொடுத்திருக்காரு பி.எஸ்.வி. குமாரசாமி.
நூல்: ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்
ஆசிரியர்: ஜே.கே.ரோலிங்
தமிழில்: பி.எஸ்.வி. குமாரசாமி
விலை: ரூ. 350
முகவரி: மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ், 42, மாளவியா நகர்,
போபால் 462 003
தொடர்புக்கு: sales@manjulindia.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago