நீங்களே செய்யலாம் - டாகி பேங்க்

By செய்திப்பிரிவு

அப்பா, அம்மா தருகிற பாக்கெட் மணியைச் சேர்த்து வைக்க, நீங்களே டாகி பேங்க் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

உருளை வடிவ டின் (டென்னிஸ் பந்து, ஷட்டில் காக் போன்றவை விற்கப்படும் டின்), வெள்ளை, பழுப்பு, கறுப்பு நிறச் சார்ட் பேப்பர், மஞ்சள் நிற மார்பிள் பேப்பர், சிகப்பு, கறுப்பு நிற ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், பசை, சிகப்பு சாட்டின் ரிப்பன்.

செய்முறை:

1.டின்னைச் சுற்றி வெள்ளை சார்ட் பேப்பரை ஒட்டவும்.

2.பழுப்பு நிறச் சார்ட் பேப்பரில் நாய்க்குட்டியின் காதுகள், தலைமுடியைப் படத்தில் காட்டியிருப்பது போல வரையவும். காதுகளை வெட்டியெடுத்துச் சார்ட் பேப்பர் ஒட்டிய உருளையின் இரண்டு பக்கமும் ஒட்டவும். உச்சியில் முடியை ஒட்டவும்.

3. வாய்ப்பகுதியை வெள்ளை சார்ட் பேப்பரிலும், மூக்கைக் கறுப்பு சார்ட் பேப்பரில் வரைந்து வெட்டவும். வெட்டியவற்றை உருளையில் சரியான இடங்களில் ஒட்டவும்.

4.மஞ்சள் சார்ட் பேப்பரில் எலும்புத்துண்டு வரைந்து, வெட்டவும். வெட்டிய எலும்புத்துண்டைச் சிகப்பு சாட்டின் ரிப்பன் மீது ஒட்டவும். இந்த ரிப்பனை உருளையின் அடிப்பாகத்தைச் சுற்றிக் கட்டி, முடிச்சு போடவும்.

5.கறுப்பு நிற ஸ்கெட்ச் பேனாவால் நாய்க்குட்டியின் கண்கள், புருவத்தை வரையவும். சிகப்பு ஸ்கெட்ச் பேனாவால் நாக்கை வரையவும்.

6.வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உதவியுடன், உருளையின் மேல் மூடியில் சின்ன துவாரத்தைப் போட்டுவிட்டால், டாகி பேங்க் தயார். விருப்பம் போலப் பணம் சேர்த்து, அதைச் சரியான வழியில் செலவழிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்