2016ம் ஆண்டில் பல சிறார் நூல்கள் வெளிவந்தன. அவற்றில் கவனம் ஈர்த்த சிறார் நூல்களின் பட்டியலைப் பார்ப்போமா?
இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்
இந்தியா, கதைகளின் சுரங்கம். நம் நாட்டில் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் கதைகளுக்குக் குறைவேயில்லை. கதை சொல்வோர் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தியாவில் காலம்காலமாகப் புகழ்பெற்ற சில கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார் பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர். இந்தக் கதைகளை டாக்டர் வெ. ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தொடர்புக்கு: 044-26241288
அறிவியல் அ முதல் ஃ வரை
ஆங்கிலத்தில் அறிவியலைப் படிக்கும் போதும், புதிய அறிவியல் சொற்களுக்கும் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அந்தச் சொற்களுக்கான அர்த்தமும் விளக்கமும் தமிழில் கிடைத்தால் புரிந்துகொள்ள வசதியாக இருக்குமென நினைப்போம். அடிப்படை ஆங்கில அறிவியல் சொற்களுக்கான விளக்கத்தை இந்த நூலில் தமிழில் தந்திருக் கிறார்கள் ஆத்மா கே.ரவியும் ஆயிஷா இரா.நடராசனும். புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.
புக்ஸ் ஃபார் சில்ரன் தொடர்புக்கு: 044-24332924
மரணத்தை வென்ற மல்லன்
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான உரூபு எழுதிய குறுநாவல் இது. பிரபல குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்பாளர் உதயசங்கர் மொழிபெயர்த்துள்ள இந்த நூலை 'வானம்' வெளியிட்டிருக்கிறது. மாயாஜாலும் தந்திரமும் நிறைந்த இந்தக் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது சாத்தான்களையும் மரணத்தையும் மல்லன் எப்படி விரட்டியடிக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
வானம் தொடர்புக்கு: 9176549991
ஆமை காட்டிய அற்புத உலகம்
சாகசம் பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியுமா? இந்தக் கதையில் கடல் எனும் அற்புதங்களும் மர்மமும் நிரம்பிய உலகத்தில் சாகசங்கள் நடைபெறுகின்றன. ஜூஜோ, டாங்கோ உள்ளிட்ட கடல் உயிரினங்களுடன் குழந்தைகளும் சேர்ந்துகொள்கிறார்கள். கடல் சூழலியல் பற்றிய முக்கிய தகவல்களையும் கதையுடன் இணைத்துத் தந்திருப்பது சிறப்பாக உள்ளது. யெஸ்.பாலபாரதி எழுதிய இந்தக் குறுநாவலை, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: 044-24332924
உலகின் மிகச் சிறிய தவளை
மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கான ஒரு ஏரியை ஒரு நிறுவனம் ஆக்கிரமிக்கிறது. அதை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறிய தவளை போராடினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்தக் குறுநாவலின் கதை. பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இந்த நூலை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது.
டிஸ்கவரி புக் பேலஸ் தொடர்புக்கு: 8754507070
கண்ணாடி / உயிர்களிடத்து அன்பு வேணும்
குழந்தைகளுக்கு நீதிபோதனை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பல கதைகள் எழுதப்படுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளின் கற்பனையையோ அறிவையோ தூண்டுவதில்லை. ஆனால், குழந்தைகளுக்கு வலிந்து போதனை செய்யாத, அறிவைத் தூண்டக்கூடிய, சுவாரசியமான கதைகளை இரண்டு தொகுப்புகளில் எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் குழந்தைகளுக்கான பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி. எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: 044-24332424
கதை கதையாம் காரணமாம்
குழந்தைகளுக்கு எழுதுவதில் தனிச்சிறப்பு பெற்றவர் வாண்டுமாமா. குழந்தைகள் தெரிந்துகொள்ள நினைக்கும் பெரும்பாலான விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உலகம், சூரியக் குடும்பம், மருத்துவம், உலோகங்கள் ஆகிய அறிவியல் சார்ந்த விஷயங்கள் கதைகளைப்போல சொல்லப்பட்டுள்ளன.
கவிதா பப்ளிகேஷன் தொடர்புக்கு: 044-24364243
சிறுவர் கலைக்களஞ்சியம்
ஆங்கிலத்தில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலும் வண்ணப் படங்கள், ஓவியங்களுடன் கூடிய ‘என்சைக்ளோபீடியா' எனப்படும் கலைக்களஞ்சியங்கள் கிடைக்கின்றன. தமிழில் அதுபோன்ற கலைக்களஞ்சியங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட வெளியாகவில்லை. இந்நிலையில் அறிவியல் எழுத்தாளர் மணவை முஸ்தபா எழுதிய குழந்தைகளுக்கான அடிப்படைக் கலைக்களஞ்சியத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: 044-26241288
சிறகடிக்க ஆசை
2013-ம் ஆண்டு பால சாகித்ய விருது பெற்ற தெலுங்கு கதைத் தொகுப்பின் தமிழாக்கமே இந்த நூல். பிரபல தெலுங்கு குழந்தை எழுத்தாளர் டி. சுஜாதாதேவி எழுதிய கதைகளை, தமிழில் தந்துள்ளார் குழந்தை எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ. சாகித்ய அகாடமி இதை வெளியிட்டிருக்கிறது.
சாகித்ய அகாடமி தொடர்புக்கு: 044-24311741
கதைடாஸ்கோப்
குழந்தைகள் சாதாரண மாகக் கதை கேட்கும்போது, கதையின் அடுத்த வரியைச் சொல்வதற்காக ‘உம்' கொட்டுவார்கள். வண்ணங்களின் விநோதக் கலவையான ‘கலைடாஸ்கோப்' போல, பல்வேறு வகைக் கதைகளைச் சொல்கிறது இந்தக் ‘கதைடாஸ்கோப்'. அது தொடர்ந்து கதை சொல்ல வேண்டுமென்றால், கேட்பவர்கள் செய்யக் கூடாத ஒரே விஷயம் ‘உம்' கொட்டக் கூடாது என்பதுதான். ஆயிஷா இரா. நடராசன் எழுதியுள்ள இந்த நூலை புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: 044-24332924
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
58 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago