உலகின் பெரிய்ய இலை

By மிது கார்த்தி

உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது நீரில் வளரும் இலை. உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால்கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. இன்னும் தெரியவில்லையா? அதன் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’.

பார்ப்பதற்குப் பெரிய தாம்பாளத் தட்டு போல காணப்படும் இது, அல்லி வகையைச் சார்ந்தது. இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரைகூட வளரும். சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல்நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 7 முதல் 8 மீட்டர் நீளத்தில் இருக்கும். தண்டுப் பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவேதான் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால்கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது!

இதன் பிறப்பிடம் இங்கிலாந்துதான். இந்த இலையைக் கண்ட விக்டோரியா மகாராணி, இதை ‘விக்டோரியா ரிஜியா’ என்று அழைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இதன் உண்மையான பெயர் அமேசானிகா. ஆனாலும், இதை இப்போதும் விக்டோரியா ரிஜியா அமேசானிகா என்றே பலரும் அழைக்கிறார்கள். இங்கிலாந்தைத் தவிர்த்து பிரெஞ்சு கயானா, அமெரிக்காவிலும் இது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக அமேசான் காட்டில் இந்த அல்லி வகை இலை அதிகம் உள்ளது. இந்தியாவிலும்கூட தாவரத் தோட்டங்கள் பராமரிக்கப்படும் சில இடங்களில் இந்த அல்லி இலையைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்