அடடே அறிவியல்: மிதக்கும் சோப்பின் ஆஹா ரகசியம்!

By அ.சுப்பையா பாண்டியன்

நீங்கள் குளிக்கும்போது சோப்பு கை தவறி வாளியில் உள்ள நீரில் விழுந்தால் என்ன ஆகும்? அந்த சோப்பு தண்ணீரில் மூழ்குமா, மிதக்குமா? ஓ… இதுவரை நீங்கள் இதைக் கவனித்ததில்லையா? சரி, ஒரு குட்டிச் சோதனை செய்து, சோப்பு மிதக்குமா, மூழ்குமா என்று தெரிந்துகொள்வோமா?

தேவையானபொருட்கள்: சாதாரண சோப்புக் கட்டிகள், ஐவரி சோப்பு, உயரமான பிளாஸ்டிக் பாட்டில்கள்,

சோதனை :

1. உயரமான ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் முக்கால் பங்கு தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள்.

2. குளிக்கப் பயன்படுத்தும் சோப்பு கட்டிகள், துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்புக் கட்டிகளைப் பாட்டிலில் உள்ள நீரில் ஒவ்வொன்றாகப் போடுங்கள். எல்லா சோப்புக் கட்டிகளும் நீரில் மூழ்குவதைப் பார்க்கலாம்.

3. இப்போது இன்னொரு பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நிரப்பி ஐவரி சோப்புக் கட்டியைப் போடுங்கள். ஐவரி சோப்பு தண்ணீரில் மிதப்பதைப் பார்க்கலாம்.

நடப்பது என்ன?

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சோப்புகள் மூழ்குவதற்கும் ஐவரி சோப்புகள் மிதப்பதற்கும் காரணம் என்ன?

ஒரு திடப்பொருளை ஒரு திரவத்தில் போடும்போது திரவத்தின் மேல்நோக்கு விசைதான், அப்பொருள் மதிக்கவோ அல்லது மூழ்கவோ காரணம். மேல்நோக்கு விசையை உந்து விசை என்றும் சொல்வார்கள். ஒரு திரவத்தில் ஒரு திடப்பொருளைப் போடும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்யும் திரவத்தின் எடை மேல்நோக்கிய உந்து விசைக்குச் சமம். இதுவே ஆர்க்மிடிஸ் விதி.

எப்போதும் சோப்புக்கட்டியின் எடை கீழ்நோக்கியும், உந்துவிசை மேல்நோக்கியும் செயல்படும். சோப்புக்கட்டிகளை நீரில் போடும்போது சோப்புக்கட்டியின் எடை உந்து விசையைவிட அதிகமாக இருந்தால் சோப்புக்கட்டி நீரில் மூழ்கி விடும். அல்லது சாதாரண சோப்புக்கட்டியின் அடர்த்தி, நீரின் அடர்த்தியைவிட அதிகமாக இருந்தால் சோப்புக்கட்டி நீரில் மூழ்கிவிடுகிறது.

ஐவரி சோப்பின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால் ஐவரி சோப்பு நீரில் மிதக்கிறது. ஐவரி சோப்பை நீரிலிருந்து வெளியே எடுத்து இரண்டாக உடையுங்கள். சோப்புக்குள்ளே காற்றுப்பகுதி எதுவும் இருக்கிறதா எனப் பாருங்கள். உள்ளே காற்றுப்பகுதி எதுவும் நிச்சயம் இருக்காது.

அதுசரி, ஐவரி சோப்பு மிதக்க என்ன காரணம்? 1890-ம் ஆண்டில் ஐவரி சோப்பு தயாரிக்கும் ‘ப்ராக்டர் அண்ட் கேம்பிள் கம்பெனி’யின் ஊழியர் ஒருவர் செய்த தவறினால்தான் மிதக்கும் ஐவரி சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஐவரி சோப்புத் தயாரிக்கப்படும்போது திரவநிலையில் உள்ள சோப்பில் காற்று பாய்ச்சப்படுவது வழக்கம். மதிய உணவுக்குச் செல்லும் அவசரத்தில் காற்றைச் செலுத்தும் இயந்திரத்தை நிறுத்த ஊழியர் மறந்துவிட்டார். இதனால், ஏராளமான காற்று திரவச் சோப்பினுள் சேர்ந்துவிட்டது. காற்றோடு சேர்ந்த சோப்பின் அடர்த்தியானது நீரைவிட குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஐவரி சோப்பு மிதக்கிறது.

காற்று கலந்த மிதக்கும் சோப்பு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஊழியர் செய்த தவறினால் கம்பெனியின் வருமானமும் அதிகரித்தது. மக்களின் வரவேற்பைக் கண்ட கம்பெனி காற்றையும் சேர்த்தே சோப்பு தயாரிக்கத் தொடங்கியது. எப்படி இருந்தாலும், சோப்புகள் மூழ்குவதற்கும் மிதப்பதற்கும் ஆர்க்கிமிடிஸ் விதிதான் காரணம்.

தொடர்புக்கு: aspandian59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்