பிரம்மாண்ட குதிரைகள்

By டி. கார்த்திக்

இந்தக் குதிரைப் வடிவங்களைப் பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோணுது? ஏதோ ஒரு மலை மேலே இதை வரைஞ்சு வைச்சுருக்காங்கன்னுதானே நினைக்கிறீங்க? உண்மைதான். ஆனால், இந்த வடிவங்களுக்குப் பின்னால ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைய புதைஞ்சு கிடக்கு. அதான் இந்த வடிவங்களோட சிறப்பே.

இங்கிலாந்திலதான் இந்தப் புகழ்பெற்ற குதிரை வடிவங்கள் மலைகள அலங்கரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த வடிவங்கள வரைஞ்சு எத்தனை வருஷம் ஆயிருச்சு தெரியுமா? 4 ஆயிரம் வருஷங்கள்! இங்கிலாந்துல ஸ்டோன்ஹென்ச், சில்பரி மலை எப்படி உருவாச்சுன்னு தெரியாதோ, அதேபோலத்தான் இந்தக் குதிரை வடிவங்களும்.

சில்பரி மலை, வைல்ட்ஷையர், ஹம்ப்ஷையர், ஆவ்பரி ஆகிய இந்த இடங்களதான் இந்தக் குதிரை வடிவங்கள் இருக்கு. ‘பயிர் வட்டங்கள்’ அதிகமா உருவாக்குற இடங்கள் இவை. அதனால இந்த ஓவியங்களுக்கு இன்னும் சிறப்பு கிடைச்சுருக்கு. உலகின் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் இந்த ஓவியங்கள் எதற்காக, யாரால உருவாக்கப்பட்டுச்சுன்னு இதுவரை தெரியவே இல்ல. இந்த வடிவங்கள் நாலாயிரம் வருஷங்கள் ஆகியும் அழியாமல் அப்படியே இருக்கு.

இந்த இடங்களில் வெண்கட்டி (Chalk) மண் வகை அதிகமா காணப்படுது. இந்த வெண்கட்டித் தரையிலேயே இந்தக் குதிரை உருவங்கள உருவாக்கியிருக்காங்க. ஆரம்ப காலத்துல இங்க பத்துக் குதிரை வடிவங்கள் உருவாக்கினாங்க. ஆனா, 19-ம் நூற்றாண்டில 3 குதிரைகள அழிச்சிட்டாங்க. இப்போ ஏழு குதிரைகள் மட்டும்தான் இருக்கு.

குதிரை வடிவங்கள் மாடர்ன் ஆர்ட் மாதிரி வரைஞ்சிருக்காங்க. ஒவ்வொரு குதிரை வடிவமும் நூறு மீட்டர் அளவுல பிரம்மாண்டமா இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்