விளையாடும்போது குழந்தைகளுக்கு உற்சாகம் கிடைக்கிறது. பலரோடு சேர்ந்து விளையாடுவதால் பல்வகை திறன்களை வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது. தனி விளையாட்டை விடவும், குழு விளையாட்டில் பலரோடு சேர்ந்து விளையாடும்போது, குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு என்ன? ‘கோழிக் குஞ்சைத் தூக்கி வா’. பெயர் மட்டுமல்ல, இந்த விளையாட்டும் ரொம்ப ஜாலியாக இருக்கும். அதுவும் குழு விளையாட்டுகளில் மிகவும் சுவாரசியமான விளையாட்டு இது.
இந்த விளையாட்டை 8 முதல் 10 குழந்தைகள் வரை குழுவாகச் சேர்ந்து விளையாடலாம். விளையாடுவதற்கு முன், ‘சாட் பூட் திரி’அல்லது ‘பூவா தலையா’மூலமாக முதல் போட்டியாளரைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
முதல் போட்டியாளரைத் தேர்வு செய்த பின், அவரைத் தனியே அனுப்பிவிடுங்கள். விளையாட்டில் பங்கேற்கும் மற்ற குழந்தைகள் அனைவரும் தங்களுக்கான பொறுப்பைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
காவல்காரர், உதவியாளர், அப்பா கோழி, அம்மா கோழி எனத் தலா ஒருவரைப் பிரித்துக்கொண்ட பிறகு, எஞ்சிய அனைவரும் கோழிக் குஞ்சுகளாக இருப்பார்கள்.
முதல் போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர்தான் இந்த விளையாட்டில் ‘கழுகு’. அவருக்குக் குழுவில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பது தெரியாது.
இப்போது நாம் விளையாடத் தொடங்குவோமா?
# “கழுகு ராஜா… கழுகுராஜா… காவலுக்கு யாருமில்லை. கோழிக் குஞ்சைத் தூக்கிப் போ..!” என்று எல்லாக் குழந்தைகளும் கோரஸாகச் சொல்லிவிட்டு, ஓரிருவராக அங்கங்கே கலைந்து நில்லுங்கள்.
# இப்போது முதல் போட்டியாளரான கழுகு, இவர்களைச் சுற்றிச் சுற்றி வர வேண்டும். இதில், யார் உதவியாளர் என்று கண்டறிய வேண்டியது கழுகின் முதல் வேலை.
# “அக்கா, அக்கா பசியெடுக்குது. என்னோட உதவிக்கு வா..!” என்று உதவியாளரிடம் சென்று கழுகு கேட்க வேண்டும். தவறானவரிடம் கேட்டுவிட்டால், “நான் வர மாட்டேன்… நீ போ..!” என்று சொல்வார்கள். இவ்வாறு கேட்பதற்கு இரண்டு வாய்ப்புகள்தான் கிடைக்கும். மூன்றாவது முறையும் தவறானவரிடம் போய் உதவி கேட்டால், உதவி செய்ய மாட்டார்கள். உதைதான் தருவார்கள்.
# அவர்களின் பிடியில் மாட்டிக்கொள்ளாமல், கழுகு தப்பியோடி வர வேண்டும்.
# உதவியாளரைச் சரியாக அடையாளம் கண்டு கேட்டுவிட்டால், “எனக்கும்தான் பசிக்குது. வா… சேர்ந்து இரை தேடலாம்…” எனக் கழுகோடு உதவியாளரும் சேர்ந்துகொள்ள வேண்டும்.
# பிறகு, இருவரும் சேர்ந்து கோழிக்குஞ்சுகளைத் தூக்கிவர வேண்டும்.
# அப்போது “முடிஞ்சா எங்களைப் பிடி; மூச்சு முட்ட ஓடிப் பிடி” என்று பாடிக்கொண்டே அனைவரும் ஓடுங்கள்.
# கழுகும் உதவியாளரும் கோழிக் குஞ்சுகளைத் தூக்க விடாமல் தடுக்க வேண்டியது, காவல்காரர், அப்பா கோழி, அம்மா கோழியின் வேலை. இந்த மூவருக்கும் அப்படியும் இப்படியுமாகப் போக்கு காட்டிவிட்டு, கோழிக் குஞ்சைத் தூக்கும் விளையாட்டில் கழுகும் உதவியாளரும் வெற்றிபெற வேண்டும்.
இவர்கள் வென்றுவிட்டால்,வேறொருவர் கழுகாக மாறி, விளையாட்டை மறுபடியும் தொடரலாம்.
இப்போது எல்லோரும் சேர்ந்து இன்னொரு முறை பாடலாமா?
“முடிஞ்சா எங்களைப் பிடி; மூச்சுமுட்ட ஓடிப் பிடி”.
(இன்னும் விளையாடலாம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago