டிங்டிங்டிங் மணிச்சத்தம்
எங்கள் தெருவில் கேட்டது!
பலூன்கள் கட்டிவைத்த
சைக்கிள் ஒன்று போனது!
பலூன் ஒன்றை வாங்கிடும்
ஆசை எனக்கு வந்தது!
அப்பாவிடம் சொன்னதும்
பணம் கைக்கு வந்தது!
பலூன் விற்கும் மாமாவிடம்
பணத்தை நான் கொடுத்ததும்
பளபளக்கும் சிவப்புநிற
பலூன் ஒன்று கிடைத்தது!
எனக்கு பலூன் தாவென
தங்கை பாப்பா கேட்டது!
நானும் அதைக் கொடுக்கையில்
நூலும் நழுவிப் போனது!
பலூன் எழும்பி வானிலே
பறந்து போகப் பார்த்தது!
பாப்பாவின் முகத்திலே
ஏமாற்றம் தெரிந்தது!
துள்ளிநான் நூலைப்பிடித்து
அவள் கையில் கொடுத்ததும்
தங்கை பாப்பா மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரித்தது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago