ங் கொய்ங்… என ரீங்காரமிட்டுக்கொண்டு கடிக்கும் கொசுவைத் திரும்ப அடித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அடிக்கும்போது கொசு எஸ்கேப் ஆகிவிடும். சுதாரித்து அடித்தாலும்கூட அவ்வளவு சுலபத்தில் அடிக்க முடியாது. கொசுவை அடிக்க ஏன் இவ்வளவு கஷ்டம்? அதற்கு என்ன காரணம்?
கொசுவை ஏன் அடிக்க முடியவில்லை? “அடிக்கப் போனேன். கண் இமைக்கும் நொடியில் பறந்துவிட்டது என்கிறீர்களா? உண்மையிலேயே கொசு ரொம்ப நேரம் உங்கள் கைகளுக்கு இடையே இருந்தது. ஆனாலும் முடியவில்லை. நீங்கள் சொல்கிற கண் இமைக்கும் நேரம் என்பது எவ்வளவு நேரம் தெரியுமா? இந்த நேரத்தில் எவ்வளவு பெரிய விஷயங்கள் எல்லாம் நடந்து விடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
தமிழ் இலக்கணத்தில் ‘மாத்திரை’என்ற ஓர் அலகு உண்டு. ஓர் எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவை, மாத்திரை என்று கூறுவார்கள். பொதுவாக ‘கண் இமைக்கும்’நேரமும் ‘கை சொடுக்கும்’நேரமும் மாத்திரை எனப்படும். சரி, மிக ரொம்ப நேரம் கைகளுக்குள் இருந்தும் கொசுவை ஏன் அடிக்க முடியவில்லை? முதலில் உண்மையில் அது ரொம்ப நேரம் நம் கைகளுக்குள் இருந்ததா?
ஓர் ஆண்டின் அருமையை மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு மாதத்தின் அருமையை மாதச் சம்பளக்காரரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு நிமிடத்தின் அருமையை உயிர் காக்கும் மருத்துவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு வினாடியின் அருமையை ஓட்டப்பந்தய வீரரிடம் கேட்டுப்பாருங்கள்.” என்ற விழிப்புணர்வு வசனத்தை நீங்கள் படித்திருப்பீர்கள் அல்லது கேட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ‘நானோ நொடி’யின் அருமையை யாரிடம் கேட்பது? அதாவது ஒரே ஒரு செகண்ட், அதை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பகுதிதான் நானோ நொடி.
ஏதேனும் விழாவுக்குத் தாமதமாகச் செல்வதையே நம்மில் பலரும் பொருட்படுத்துவதில்லை. இதில் ‘நானோ நொடி’யை யார் பொருட்படுத்துவார்கள்? ‘நானோ நொடி எல்லாம் ஒரு விஷயமா?” என்று நினைப்பவர்களைத்தான் கொசு கடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பித்தும் போய்விடுகிறது. ‘நானோ நொடி’யில் அது தப்பித்துச் செல்வது ஆச்சரியமில்லை. எப்படித் தப்பிக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
அந்த ஆச்சரியத்திற்கு முன்னால், நேரத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நொடி நேரத்தில் இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கிறது? ஒரு ‘நானோ’ நொடியில் என்னவெல்லாம் நடக்கிறது?
ஒரு நொடி நேரத்தில் ஒரு வார்த்தையை நாம் பேசிவிட முடியும். ஓர் எழுத்தை எழுதிவிட முடியும். போனில் ஒரு ஹலோ சொல்லிவிட முடியும். ஒரு ‘மடக்கு’த் தண்ணீரை விழுங்கிவிட முடியும். ஒரு நானோ நொடியில் என்ன நடக்கிறது என்பது அதைவிட ஆச்சரியம். இந்த ஆச்சரியத்தைத் தெரிந்துகொண்டால், கொசு ஏன் தப்பித்துவிடுகிறது என்பதும் தெரிந்துவிடும்.
ஒரு நானோ நொடியில், பூமி தன் சுற்றுப்பாதையில் 30 மீட்டர் தூரம் நகர்ந்திருக்கும் இடி முழக்கம் 30 செ.மீ. தொலைவைக் கடந்து முழங்கியிருக்கும். மின்னல் ஒளி ரொம்பவே ஆச்சரியம், ஆயிரத்தில் ஒரு பங்கு வினாடி நேரத்தில் அது 300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போயிருக்கும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் கார் ஒன்று 3 செ.மீ. தூரம் நகர்ந்திருக்கும்.
இந்த நானோ நொடியில் தன் இறகை மேலும் கீழுமாகக் கொசு ஒரு முறை அசைத்திருக்கும். அதாவது கொசு ஒரு வினாடி நேரத்தில் தன்னுடைய இறகைக் கிட்டத்தட்ட ஆயிரம் முறை அடித்துக் கொள்கிறது. அதனால்தான் ‘ங்கொய்ங்’என்ற சப்தம் வருகிறது. வினாடிக்கு ஆயிரம் முறை அடித்துக்கொள்கிறது என்றால் அதன் வேகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு வேகத்தில் போகிற கொசுவை நம்மால் எப்படிப் பிடிக்க முடியும்? அடிக்க முடியும்?
சில சோம்பேறிக் கொசுக்கள் இருக்கின்றன. அவை நிமிடத்துக்கு 500 அல்லது 600 முறை மட்டுமே இறகுகளை அடித்துக்கொள்கின்றன. கொசுவைப் பொறுத்தவரையில் இது ரொம்ப ரொம்ப மெதுவான வேகம். இந்த மெதுவான நேரத்தில் கொசுக்கள் நம் கைகளில் நீண்ட நேரம் இருப்பதாகவே அர்த்தம். அப்படியிருக்கும் அவை தப்பித்து விடுகின்றன. இப்போது சொல்லுங்கள். “நீயெல்லாம் எனக்குக் கொசு மாதிரி” என்று யாரையாவது பார்த்துக் கேட்க முடியுமா?
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago