யானை என்ன யானை!

1. நாம் தோலைப் பாதுகாக்க கிரீம் பூசுவது மாதிரி, தன் தோலைப் பாதுக்காத்துக் கொள்ள தலையிலும் உடலிலும் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் யானை.

2. யானையின் காதுதான் அதற்கு விசிறி! அதை அடிக்கடி அசைத்து, தன்னுடைய உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும்.

3. யானையின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும், அகன்ற பாதங்களைக் கொண்டிருப்பதாலும் ரொம்ப நேரம் நின்றாலும், அதுற்குக் கால் வலிக்காது. நின்றபடியே தூங்குவதுதான் யானையின் பழக்கம்.

4. யானையோட தந்தம் அளவுக்கு, பற்களை நாம் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. யானைக்கு மேல் தாடையில் பற்கள் இல்லை. கீழ் தாடையில் 26 பற்கள் உண்டு.

5. தரை மேல் வாழும் பாலூட்டிகளில் அதிக எடை கொண்ட விலங்காக இருந்தாலும்கூட, வேகமாக ஓடக்கூடியது யானை. சராசரியாக மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை ஓடும்.

6. யானையின் வயிற்றைப் பார்த்தே நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கலாம். ஆமாம், யானை ஒரு நாளில் கிட்டத்தட்ட 300 கிலோ அளவு பசுந்தழைகளைச் சாப்பிடும். 350 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

7. யானைக்கு உடல் அரித்தால் காலைத் தூக்கி சொரிந்துகொள்ள முடியாது இல்லையா? அதனால் சின்னச்சின்ன மரக்குச்சிகளை, அதற்காக ஒடித்து வைத்துக் கொள்ளும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE