போன வாரம், உறிஞ்சு குழலை வைத்து மேஜிக் வித்தையைச் செய்து காட்டி அனைவரையும் வியக்க வைத்தீர்களா? இந்த வாரம் பல்குத்தியை வைத்து மேஜிக் வித்தை செய்வோமா?
என்னென்ன தேவை?
பல் குத்தப் பயன்படும் பல்குத்தி, ஒட்டும் டேப்.
மேஜிக்: ·உங்கள் நன்பர்கள் முன் நின்று, பல்குத்தியைப் படத்தில் காட்டியபடி கையில் பிடித்துகாட்டுங்கள்.
# பிறகு கண்களை இறுக்கமாக மூடி மேஜிக் மந்திரத்தைச் சொல்லுங்கள்.
# இப்போது கையைத் திறங்கள். பல்குத்தி மாயமாக மறைந்து போயிருக்கும்.
மேஜிக் ரகசியம்:
# இந்த மேஜிக் செய்வதற்கு முன்பு, நீங்கள் கொஞ்சம் முன்தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.
# ·உங்கள் கட்டைவிரலில் பல்குத்தியை யாருக்கும் தெரியாமல், படத்தில் காட்டியபடி டேப் போட்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.
# ·நீங்கள் மேஜிக் செய்யும் பல்குத்தியை எல்லோருக்கும் காட்டும்போது, உங்கள் கட்டை விரலை மற்ற விரல்களால் மறைத்துக் கொள்ளுங்கள்.
# அப்போதுதான் டேப் போட்டுப் பல்குத்தியை விரலோடு ஒட்டியிருப்பது யாருக்கும் தெரியாது.
# பின் மந்திரம் சொல்லிக் கையைத் திறக்கும்போது, விரலோடு ஒட்டியிருக்கும் பல்குத்தி கைக்குப் பின்னால் மறைந்துபோய்விடும்.
# இதைப் பார்க்கும் எல்லோருக்கும் பல்குத்தி மாயமாக மறைந்துவிட்டதைப் போலத் தெரியும்.
# இதுதான் பல்குத்தியை மறையவைக்கும் மேஜிக். பல்குச்சிக்குப் பதிலாகச் சாதாரண குச்சியை வைத்தும் இந்த வித்தையைச் செய்யலாம்.
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago