வாண்டு: ஹை ஜாலி... ஜாலி...
பாண்டு: என்னப்பா ஜாலி ஜாலின்னு கத்திக்கிட்டு வர?
வாண்டு: இன்னைக்குப் பள்ளிக்கூடம் தொடங்குதுல்ல. நம்ம நண்பர்களைப் பார்க்கலாம். புது நண்பர்களும் வருவாங்க.
பாண்டு: அதெல்லாம் சரிதான். புது வகுப்பறை எப்படி இருக்கும்ணு தெரியலையே.
வாண்டு: ஒவ்வொரு வருஷமும் இதையேதான் சொல்ற. அதுவும் நல்லபடியாதான் இருக்கும்.
பாண்டு: நீ சொல்றதும் சரிதான். பள்ளிக்கூடத்துக்கு யூனிஃபார்ம்லதான் வரணும்னு கண்டுபிடிச்சது யாருன்னு தெரியலை. கலர் கலர் டிரஸ்ல வந்தா குறைஞ்சா போய்டும்.
வாண்டு: வகுப்பறைக்குள்ள ஏழை, பணக்காரர், ஜாதி, மதம் எதுவும் தெரியாத அளவுக்கு எல்லோருமே சமம்னு சொல்றதுக்காகத்தான் யூனிஃபார்ம் போடுறோம். அது உனக்குப் பொறுக்கலையா?
பாண்டு: டென்ஷன் ஆகாதே... சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். பள்ளிக்கூட யூனிஃபார்மை யாரு கண்டுபிடிச்சாங்கன்னு உனக்குத் தெரியுமா?
வாண்டு: உண்மையில ஸ்கூல் யூனிஃபார்ம் போடுவதை எந்த நாட்டுல கண்டுபிடிச்சாங்கன்னு சரியாத் தெரியலை. ஆனா, இங்கிலாந்துல 1600-ம் வருஷத்துக்குப் பிறகு யூனிஃபார்ம் பயன்படுத்தியதா பதிவு இருக்கு. அதுக்கு முன்னாலயே யூனிஃபார்ம் இருந்ததாகச் சொல்றாங்க.
ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. முதல்ல குழந்தை இயேசுன்னு ஒரு மருத்துவமனை ஸ்கூல்லதான் யூனிஃபார்ம் போடுறதைக் கட்டாயமாக்கியிருக்காங்க. அதுக்கப்புறமா பள்ளிக்கூடங்களுக்கு யூனிஃபார்ம் போடும் வழக்கம் வந்ததுன்னு சொல்றாங்க.
பாண்டு: அப்போ 500 வருஷங்களா பள்ளிக்கூடம் போறவங்க யூனிஃபார்ம் போடுறாங்களா?
வாண்டு: ஆமா பாண்டு. சரி, ஒரு குட்டிப் பையன் 12 வயசுக்குள்ள நிறைய பட்டங்கள் வாங்கிட்டதா, அம்மாகிட்ட எங்க அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு. நேரம் ஆகிருச்சுன்னு நான் கிளம்பிட்டேன். அதைப் பத்தி உனக்குத் தெரியுமா?
பாண்டு: ஓ... அதுவா? எனக்குத் தெரியுமே. அமெரிக்காவுல கலிபோர்னியா மாகாணத்துல அந்தக் குட்டிப் பையன் இருக்கான். அவனோட பேரு தனிஷ்க் ஆபிரகாம். அவனோட சொந்த ஊரு கேரளாதான்பா.
பொறந்ததுலயிருந்து அமெரிக்காவுல இருக்கான். 12 வயசு ஆகுது. அதுக்குள்ள பல பட்டப் படிப்புகளை இந்தப் பையன் முடிச்சுட்டான்.
வாண்டு: அது சரி, 12 வயசுக்குள்ள இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?
பாண்டு: தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையா இருந்தப்பவே ரொம்ப புத்திசாலியாவும் திறமையோடும் இருந்திருக்கான். இதைப் பார்த்துட்டு அவங்க அம்மா, அப்பா அமெரிக்காவுல புகழ்பெற்ற ஸ்கில் சென்டரான ‘மென்சா’வில் சேர்த்துவிட்டுருக்காங்க. அப்போ அவனுக்கு 4 வயசுதான்.
ஆபிரகாமுக்கு 7 வயசு முடியறதுக்குள்ள, வீட்டிலேயே பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சுட்டான். 10-வது வயசுலேயே மாகாண அளவிலான தேர்வு எழுதி உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிச்சு, டிப்ளமோவுக்கு இணையான பட்டத்தை வாங்கிட்டான்.
வாண்டு: 10 வயசுக்குள்ளேயே பள்ளிப் படிப்பையே முடிச்சுட்டானா? ரொம்ப வியப்பா இருக்கே பாண்டு.
பாண்டு: இதோட முடியலை. அதுக்கப்புறமா ‘ரிவர்’ன்னு ஒரு கல்லூரியில சேர்ந்து பொது அறிவியல், கணிதம், இயற்பியல்ன்னு 3 பாடங்களில் பட்டம் வாங்கி சாதனை படைச்சிருக்கான். இந்தச் சாதனையைப் பார்த்து அமெரிக்கா அதிபர் ஒபாமா பாராட்டிக் கடிதமும் எழுதியிருக்காரு.
இப்போ அவனுக்கு 13 வயசு ஆகுது. இன்னும் நிறைய கல்லூரிகள்லேர்ந்து சேர அழைப்பு வந்துக்கிட்டு இருக்காம். இதுவரை எந்த முடிவும் ஆபிரகாம் எடுக்கலையாம். இருந்தாலும், 18 வயசுக்குள்ள டாக்டராகப் போறதா சொல்லியிருக்கான் ஆபிரகாம். அதுதான் தன்னோட லட்சியம்ணும் சொல்லியிருக்கான்.
வாண்டு: பிரம்மிப்பா இருக்குப்பா. சிலருக்கு மட்டும் அறிவு எக்குத்தப்பா வளர்ந்திடும் போலிருக்கே. இதேமாதிரி இன்னொரு திறமையான விஷயத்தை நான் சொல்றேன், கேளு.
பாண்டு: அப்படி என்ன திறமை?
வாண்டு: இதுவும் அமெரிக்கா விஷயம்தான். வர்ஜீனியா மாகாணத்துல அன்யா எல்லிக்னு ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா. பிறந்தப்பவே கை விரல்களே இல்லாம பிறந்திருக்கா.
பாண்டு: அடப் பாவமே! கை இல்லைன்னா ரொம்பக் கஷ்டமாச்சே.
வாண்டு: உண்மைதான்… ஆனா, இவளுக்குத் தன்னம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. கை விரல்களே இல்லைன்னு கொஞ்சமும் கவலைப்படல. வளர வளர யாரையும் எதிர்பார்க்காம தன்னோட வேலைகளைச் செய்ய எல்லிக் பழகிக்கொண்டாளாம். இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவைப் புடிச்சு எழுதப் பழகியிருக்கா.
தனிஷ்க் ஆபிரகாம்
பாண்டு: பாவம், கையெழுத்து ரொம்ப கிறுக்குற மாதிரி இருந்திருக்கும்ல?
வாண்டு: அதான் இல்லை. கை நல்லா இருக்குறவங்களே கிறுக்கி எழுதுவாங்க. ஆனா, விரல்களே இல்லாம அன்யா எல்லிக்கோட கையெழுத்தைப் பார்த்தா எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்போல இருக்கு.
அவ்ளோ அழகா இருக்குமாம். அழகான கையெழுத்துக்காக இந்த வருஷத்துக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது எல்லிக்கிற்கு கிடைச்சிருக்கு. எல்லிக்கோட பெருமை அந்த நாட்டுக்காரங்களை வியப்பில் ஆழ்த்திருக்காம்.
பாண்டு: பின்னே, இருக்காதா? பேசிக்கிட்டு வந்ததுல ஸ்கூல் வந்ததே தெரியலை. சரி முதல் நாள் வகுப்பு. இன்னைக்குச் சீக்கிரம் விட்டுடுவாங்க. அப்போ பார்க்கலாம்.
வாண்டு: சரி பாண்டு, டாட்டா!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago