கத்தரிக்காயில் கூட்டு வைக்கலாம், சாம்பார் வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியும்தானே. கத்தரிக்காயில் திமிங்கலமும் செய்யலாம். அது தெரியுமா? வீட்டில் சமைப்பதற்காகக் கத்தரிக்காய் வாங்கி வந்தால் முயற்சி செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
குண்டான, நீளமான கத்தரிக்காய் ஒன்று, ப்ரவுன் சார்ட் பேப்பர், வெள்ளை பேப்பர், டியூப், வாளி, கத்திரிக்கோல் மற்றும் குண்டூசிகள்.
செய்முறை:
1 படத்தில் காட்டியவாறு மீனின் துடுப்பு, வால் வடிவில் ப்ரவுன் சார்ட் பேப்பரை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
2 குண்டூசி கொண்டு மீனின் துடுப்பு மற்றும் வாலைக் கத்தரிக்காயில் குத்திக்கொள்ளுங்கள்.
3 வெள்ளைத்தாளைக் கண்கள் வடிவத்தில் வெட்டவும். கத்தரிக்காயில் அதைப் பொருத்துங்கள்.
4 ஒருவரின் துணையுடன் கத்தரிக்காயில் மீனின் வாய்க்குக் கீழே, அதன் கண்ணுக்கு மேலே வருமாறு ஒரு துளையிடுங்கள். நீங்கள் வைத்திருக்கும் ட்யூப் அந்தத் துளைக்குள் போகுமாறு அதன் அளவு இருக்க வேண்டும்.
5 ட்யூபின் ஒரு முனையை துளைக்குள் செருகி மேலேற்றுங்கள். இன்னொரு முனையை ஒரு வாளித் தண்ணீருக்குள் வையுங்கள். வாளி, கத்திரிக்காய் இருக்கும் இடத்திலிருந்து உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.
இப்போது திமிங்கலத்தின் மூக்கிலிருந்து நீர் ஊற்று போல பொங்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago