வாண்டு: ஹாய் பாண்டு, எங்கே வேகவேகமா போய்கிட்டு இருக்கே?
பாண்டு: வாண்டு, உன்னைக் கவனிக்கவேயில்லை. ஸ்கூல் புராஜெக்ட்டுக்கு பிரிண்ட் எடுக்கணும். அதான் கடைக்குப் போய்ட்டு இருக்கேன்.
வாண்டு: ஓ... பிரிண்ட் எடுக்கப் போறீயா? நீ பிரிண்ட் எடுக்கக் கடைக்குப் போய்க்கிட்டு இருக்க. அமெரிக்காவில் பிரிண்டர் செஞ்சே ஒரு குட்டிப் பையன் பணக்காரன் ஆகிட்டான்.
பாண்டு: என்ன வாண்டு, வழக்கம் போல ஏதோ பொடி வைச்சு பேசுற? அப்போ ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு நினைக்கிறேன்.
வாண்டு: ஆமா பாண்டு, ஒரு விஷயம் இருக்குதான். அதை உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே வழியில வந்துட்ட.
பாண்டு: சரி... சரி... சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு.
வாண்டு: சொல்றேன் பாண்டு. அமெரிக்காவுல கலிபோர்னியால சுபம் பானர்ஜின்னு 13 வயசு பையன் இருக்கான். 8-ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கான். நம்ம நாட்டு பையன்தான். ஆனா அம்மா, அப்பாவோட அங்க இருக்கான்.
பாண்டு: ம்... விஷயத்தை நேரா சொல்லேன்.
வாண்டு: உனக்குப் பொறுமையே இல்லை பாண்டு. சொல்லிக்கிட்டுதானே இருக்கேன். அந்தப் பையன் பள்ளியில கொஞ்ச நாள் முன்னாடி அறிவியல் கண்காட்சி நடந்துச்சுசாம். அதுல சுபம் பானர்ஜி ஒரு புராஜெக்ட் செஞ்சு வைச்சானாம். கண்ணு தெரியாதவங்க படிக்குற மாதிரி ‘பிரெய்லி பிரிண்டரை’செஞ்சு வைச்சிருக்கான்.
பாண்டு: ஓ... பிரெய்லி பிரிண்டரா? அப்போ அதுல பிரிண்ட் எடுத்தா அதைக் கண்ணு தெரியாதவங்க கையில தடவிப் பார்த்து படிக்க முடியாமா?
வாண்டு: ஆமா பாண்டு, நிச்சயமா படிக்க முடியும். ஆனா, விஷயம் அது இல்லை.
பாண்டு: அப்போ என்ன விஷயம்?
வாண்டு: இதுமாதிரி பிரெய்லி பிரிண்டரை ஏற்கெனவே செஞ்சிட்டாங்க. ஆனா, அதோட எடை 9 கிலோவுக்கு மேலே இருக்குதாம். சுபம் பானர்ஜி செஞ்சிருக்குற பிரிண்டர் ரொம்ப கம்மியான எடையில இருக்காம். விலையும் ரொம்ப கம்மியாம்.
பாண்டு: ஓ... நம்மூரு பையன் அமெரிக்காவுக்குப் போய்ச் சாதிச்சிருக்கான்னு சொல்லு.
வாண்டு: ஆமாமா. அதுமட்டுமில்ல, அந்த சுபம் பானர்ஜி பிரிண்டர் செய்யுற கம்பெனியும் தொடங்கிட்டானாம். இந்தப் பிரிண்டர் நிறைய விக்குதாம். அதனால சின்ன வயசுலேயே அந்தப் பையன் பெரிய பணக்காரன் ஆகிட்டான்.
பாண்டு: ம்... இப்பவே தொழிலதிபர் ஆயிட்டான்னு சொல்லு. ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு. சரி, ‘மாயா பஜார்’ல கலாமைக் கொண்டாடுவோம் போட்டி முடிவுகள் வந்துச்சே. உனக்குப் பரிசு கிடைச்சதா?
வாண்டு: இல்லை பாண்டு.
பாண்டு: எனக்கும் கிடைக்கல. ஆனா, நம்மள மாதிரி நிறைய குட்டிப் பசங்க பரிசு வாங்கப் போறாங்க. அவுங்களுக்கு நாமளும் வாழ்த்து சொல்லுவோம்.
வாண்டு: நம்மள மாதிரிப் பரிசு வாங்காத குட்டிப் பசங்களுக்கு இன்னொன்னையும் சேர்த்துச் சொல்லுவோம். போட்டில ஜெயிக்கிறது இரண்டாம்பட்சம்தான். போட்டியல கலந்துக்குறதுதான் ரொம்ப முக்கியம். திரும்பவும் போட்டி வைக்காமலா போகப் போறாங்க?
பாண்டு: ஆமாமா, ரொம்ப சரியா சொன்னே. சரி, நான் பிரிண்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போகணும், அப்போ வரட்டுமா?
வாண்டு: சரி பாண்டு, டாட்டா பை பை...
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
56 mins ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago