• அணில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கொறித்து உண்ணும் பழக்கமுடையது.
• முதுகில் இருக்கும் மூன்று கோடுகள்தான் தென்னிந்திய அணிலின் அடையாளம்.
• ‘இந்திய அணில்கள்’ என்றழைக்கப்படும் அணில்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன.
• அணிலின் வாலில் புதர் போல ரோமம் அடர்த்தியாக இருக்கும். வால் அதன் உடலை விடச் சற்று நீளம் குறைவானது. அணிலின் வாலில் வெள்ளையும் கறுப்புமான ரோமங்கள் கலந்திருக்கும்.
• அணில் குஞ்சுகள் வெளுத்தும் பழுப்பாகவும் காணப்படும். வளரும்போது அதன் நிறம் அடர்த்தியாக மாறும்.
• பழங்கள், கொட்டைகள், மலர்கள், முளைகள், பூச்சிகள் ஆகியவற்றைச் சாப்பிடும். சில வேளைகளில் பறவைக் குஞ்சுகளையும் சாப்பிடும்.
• ஒரு பெரிய அணிலின் எடை சராசரியாக 100 கிராம் மட்டுமே இருக்கும்.
• பெண் அணிலின் கர்ப்பக் காலம் ஒரு மாதத்தைவிடக் கொஞ்சம் அதிகம். 34 நாட்கள்தான். இலையுதிர் காலத்தில் புல்,மென்மையான பொருட்கள் மூலம் கூடுகளை அமைத்து பெண் அணில் குட்டி போடும்.
• ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை அணில் போடும்.
• அணில்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் பழக்கமுடையவை. நகரங்களில் மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளைச் சாப்பிட சீக்கிரமே பழகிவிடும்.
• அணில்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். உணவு ஆதாரங்களை மற்ற உயிர்கள் மற்றும் சகாக்களிடம் இருந்து பாதுகாப்பதில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்படும்.
• அணில்கள் சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்வரை உயிர் வாழும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago